பக்கம்:சோழர் வரலாறு.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர். மா. இராசமாணிக்கனார்

325


நிருத்தப் பேரரையானான பரராசவன் பொன்னன்’ என்பவற்குத் திருக்கடவூர்ச் சிவன் கோயிலில் ‘நட்டுவ நிலை’ என்ற தொழில் நடத்தும்படி ஆணையளித்தான்[1]. இதனால் இப்புலவர்பால் அரசன் கொண்டிருந்த மதிப்புத் தெரிகிறதன்றோ?

இலக்கண மண்டபம்: இது ‘வியாகரனதான வியாக்யான மண்டபம்’ என வடமொழியிற் பெயர் பெறும். திருவொற்றியூரில் கோவிலைச் சேர்ந்து இம்மண்டபம் இருந்தது. அங்கு மாணவர் பலர் வடமொழி இலக்கணப் பயிற்சி பெறுவதற்காக மண்டபம் ஒன்று இருந்தது. இதனைக் கட்டியவன் நெல்லூரை ஆண்ட சித்தரசர் அதிகாரி ஒருவன். அவன் இக் கல்விச்சாலை நன்கு நடைபெறக் குலோத்துங்கன் காவனுர் என்ற சிற்றுரை உதவினான்.அவ்வூரைக் குலோத்துங்கன் இறையிலியாக்கக் கட்டளை பிறப்பித்தான்[2].

இங்ஙனம் இக்குலோத்துங்கன் கல்வி நிலையைத் தன் பெருநாட்டில் பலபடியாகச் சிறப்பித்துள்ளான்; தமிழ் வாணரைப் போற்றி ஆதரித்து நாட்டில் தமிழ்க்கல்வி பரவும் படி செய்துள்ளான்; கோவில்களில் திருப்பதிகங் களை ஒதவும் வடமொழிப் பயிற்சியை மாணவர்க்கு அளிக்கவும் ஏற்பாடுகள் செய்துள்ளான்.

சமய நிலை : மூன்றாம் குலோத்துங்கன் சிறந்த சிவ பக்தன். இவனைக் ‘காமாரிக்கு அன்பன்;’ ‘வெள்விடை யோன் தன்னேயம் தன்னை மறவாதவன்’, ‘நாகாபரணனை ஏத்துவோன்’ என்றெல்லாம் குலோத்துங்கன் கோவை புகழ்ந்துள்ளது. திருவாரூர் வீதி விடங்கப் பெருமானே இவனை ‘நம் தோழன்’ என்று கூறியதாகத் தம் கோவில் தானத்தார்க்கு அப்பெருமானே கட்டளை இட்டாற் போல இவனத


  1. M.E.R. 255 of 1925
  2. M.E.R. 201 of 1931.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சோழர்_வரலாறு.pdf/327&oldid=1234298" இலிருந்து மீள்விக்கப்பட்டது