பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோழவரிச்சரித்திரச்சுருக்கம். இலக்கியங்களிற் சிறப்பிக்கப்பட்டவரசர்களில் முக்கியமானவர்கள் பெருநற்கிள்ளி, கரிகாலன், கோச் செங்கணான் என்னுமிவ் மூவர்களே. இவர்களுட் கரிகாலன் காவிரியினிருமருங்கும் கரையிடு வித்தான். கோச்செங்கணான் என்பவன் முன்ஜன்மத்தில் ஓர் சிலந்திப் பூச்சியாயிருந்தனனென்றும், அப்பொழுது, அப்பூச்சி திருவானைக் காவில் திருவெண்ற வற் கீழமர்ந்திருந்த சிவபிரானை, சூரிய கிரணங்கள் படாவண்ணம் வலைகள் கட்டிப் பாது காக்கும் தொண்டுசெய்து வந்த தென்றும், அதே சிவலிங்கத்தை ஒரு யானையும் வழிபட்டு வந்து, ஒவ்வொரு தினமும் மகாதேவர்மீது சிலந்தி வலைபரப்பியிருப்பதை நீக்கிப் பூசித்துச்செல்வது வழக்கமென்றும், தன் பணிவிடைகளை இரக்கமின்றியழிக்கும் யானையின் மீது சினந்து, சிலந்தி, ஒருநாள் யானையின் துதிக்கையுட் புகுந்து நோவுண்டாக்க, அப்பொழுது யானை அதனைப்பொறுக்க முடியாமல் தும்பிக்கையைக்சியே அறைந்து தன்னை யும், தன்னுட்புகுந்திருந்த சிலந்தியையும் கொன்றதென்றும், இவ்வாறு மரணமடைந்த சிலந்தியே மறுஜன்மத்திற் கோச்செங்கணானாகப்பிறந் தது என்றும் புராணங்கூறும். இவன் “எண்டோன சர்க் கெழில்மாட மெழுபது செய் துலகமாண்டா"ன். அன்றியும் இவன் "விறல்மன்னர் திறலழிய" த் "தனிவேலுய்த்" தவன் எனவும் தெய்வவாள்வலங் கொண்டவ" $ ன் எனவும் கூறப்படுவன்.

  • “தொழுது மன்னரே கரைசெய் பொன்னியிற் றொடா வந்திலா முகரி யைப்படத் - தெழுது கென்றுகண் டிதுமி சைக்கணென் றிங்கழிக்கவே யங்கழிந்தது” (கலிங்கத்துப்பாணி - இராசபாரம்பரியம் - பா - 20)

t"பண்பெல சருகாற் பந்தர், பயின்ற ஏற் சிலந்திக்குப் பாராள் செல்வம் ஈந்தவன்காண்” எனத் திருக்கச்சியேகம்பத்திருத்தாண்டகத்திலும்' “புத்தியினாற் சிலந்தியுந்தன் வாலினூலாம் பொதுப்பந்த ரதுவிழைத்துச் சருகான் வேய்ந்த, சித்தியினா லாசாண்டு சிறப்புச் செய்யச் சிவகணத்துப் புகப்பெய்தார்" எனத் திருப்பாசூர்ப்பதிகத்தும்---திருநாவுக்கரசு சுவாமிகள் உரைத்தமையும் காண்க. 1 பெரிய திருமொழி, 6-ம் பத்து. திருநறையூர்ப்பதிகம், பா-8. $ ஷ பா - 6,13.)