பக்கம்:சோழவமிச சரித்திரச் சுருக்கம்.djvu/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சோழவமிசசரித்திரச்சுருக்கம். இரண்டாமுறை விக்கிரமாதித்தன் மீது படையெடுத்துச்செல்ல, அவ னும் குலோத்துங்கனை எதிர்கொண்டு (கோலார் ஜில்லா கிலுள்ள) நங் கிலி என்னுமிடத்துச் சந்தித்து, தோல்வியடைந்து புறங்காட்டியோட த்தலைப்பட்டான். அப்பொழுது குலோத்துங்கன் அவனை மணலூர் வழியாய்த் திங்கபத்திரைக்கப்பால் துரத்தியடித்து, அவன் சமுத் திரத்தில் புக்கு ஒளிக்கும்படி செய்தான். இச்சண்டையில் குத்தளர் இராஜதானியாகிய கலியாணபுரம் குலோததுங்கன் வசமாயிற்று. இதைத்திரும்பவுங்கைப்பற்றச் சாளுக்கியர் வெகு பிரயாசைப்பட வேண்டியிருந்தது என்று பில்ஹணகளி விக்கிரமாங்க தவ சரித்திரத்தில் கூறியிருக்கிறார். இவ்யுத்தத்தின் நிகழ்ச்சியொன்றில்தான் குலோத் துங்கன், கலிகைத்துப்பரணியிற் கூறியவாறு, ந விலையில் ஆயிரயானை களைப் பிடித்துக்கொண்டிருக்கவேண்டும். வடநாடுகள் தன்வசப்பட்டதும் தென்னாடுகளை வெல்ல முயன் றான். பாண்டியர்கள் முதலில் தாக்கப்பட்டார்கள். அப்பொழுது ஒரு பாண்டியன் சண்டையிலிறந்தான். இச்சண்டையில் மன்னார் குடாக்கடலைச்சார்ந்த நாடும், பொதியமலையைச்சார்ந்த கூற்றமும், கன்னியாகுமரியும், கோட்டாறும் இவனதாயின. பாண்டியர்கள், பிற்காலத்தே தமதென்னாதிருக்கவேண்டி எல்லைகளை நன்குவகுத்து, அவ்வவ்விடங்களிற் சேனைகளை நிறுத்திக் தன்னால் ஜயிக்கப்பட்ட நாட்டைப் பத்திரப்படுத்திக்கொண்டான். இதன்பின் இப்பொழுது மலையாளமென்று பெயர்பெறுங் குடமலை நாட்டைக்கைக்கொண்டான். இந் நாட்டைத் தாக்கியகாலத்து, எதிர்த்து நின்ற மலையாளிகள், வெகு தைரியத்துடன் போர்பொருது, எல்லாரும் மாண்டார்கள். குலோத் துங்கன் விழிஞத்திலும் சாலையிலும் தன் சைன்னியக்களை நிறுத்தி, காந்தளூர்ச்சாலையில் சோர்கள் கலங்களை இரண்டு கடவை பறுத்துத் திரும்பினான். யுத்தங்களெல்லாம் ஒருவாறு ஓய்ந்து சிறிதுகாலம் சௌக்கியமாய் இராச்சியபாரம் தாங்கி வருகையில், கலிங்கத்தரசனாகிய சோட சங்கன், கப்பங்கட்டவில்லை. பல வருட்க்களாய்ப் தாராமல் மறுத்த