பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

________________

வேறு எவரையும் இவ்வரசுரிமைக்கு முயற்சி செய்ய விடலாகாது. தெய்வத் திருவருளால் நம்மை யாள்வதற்கு எவர் வருவாரோ, அவரையே அரசராகக் கொள்வோம். தெய்வத் திருவருளை உணர்தற்கு ஒரு வழியுளது: அது நம் முன்னோர் இத்தன்மையான காலங்களிற் கைக் கொண்ட நெறியேயாகும். நம் அரசினர்க்குரிய களிற் றரசை அலங்கரித்து அதன் கையிலே ஒரு பொற்குடத் திற் காவிரி நீரும் பூமாலை யொன்றும் தந்து அனுப்பு வோம். அது யாரைத் தன் பிடர்மீது சுமந்து இங்குக் கொணர்கிறதோ, அவரையே நம் அரசராகக் கொள் வோம். இதுதான் இந்நிலைமையில் நாம் செய்தற்குரிய தாகும், என்றனர். இதனை அமைதியோடு கேட்டிருந்தோர் எல்லோ ரும் இறுதியில் ஒரே மனமாய், " அவ்வண்ணமே செய் வோம்,” என்றனர். பெரியோர் கூறிய வண்ணம் நிறை வேற்ற நல்லோர் பலர் நுதல் விழி நாட்டத் திறையோன் வாழும் கழுமல முதுபதி யடைந்தனர்; அரசுவாவை அலங்கரித்தனர். இறைவனுக்குச் சிறப்புக்கள் செய் வித்து, அவன் அருள் பெற்று, அக்களிற்றரசின் கையில் ஒரு பொற்குடம் நிறையக் காவிரி நீரும் மணமலர் மாலை யொன்றும் தந்து, மங்களகரமான வாத்திய முழக்கங் களுக்கிடையே அனுப்பினர். அது விரைந்து நடந்து, சோழ நாட்டி லெங்கும் சஞ்சரித்து, இடர்ப்படாமல் குறிப்பிட்டவொரு பொரு ளைப் பெறக் கருதி அஃது இருக்குமிடம் நன்கறிந்து செல்லும் அறிவுடை யொருவன் போல, வேகமாக நடந்து சென்றது; சோழநாட் டெல்லையை விரைவிலே