இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
39
________________
39. கடந்து, சேர நாட்டை அடைந்தது ; சேர நாட்டகத்த தாகிய கருவூரை நெருங்கி வந்துகொண்டிருந்தது. இறைவன் திருவருட் செயலை எவரே யறிவார்! சிறிது தூரம் அதனைப் பின்பற்றி வந்த மாந்தரனைவரும், அது வரும் வேகத்தைக் கண்டு உடன் றொடர்ந்து வர விய லாது, பின்னிடைந்தனர். மிருகமே யாயினும், இறை வன் அருள் வசத்தால் எண்ணிறந்த மக்களுடைய நல் நோக்கம் ஒன்றை நிறைவேற்ற உற்ற துணையாய் அமைந்த அவ்வேழம், கருவூர்ப் புற மதிலை யடைந்தது.