பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

________________

உடைமையும் வறுமையும் ஒருவழி நில்லா : குடைநிழ லிருந்து குஞ்சர மூர்ந்தோர் . நடைமெலிந் தோரூர் நண்ணினும் நண்ணுவர். -- நறுந்தொகை இளமைப் பருவத்தே முடி சூட்டப் பெற்ற திருமா வளவன், இறைவன் அருள் வசத்தாலும் முன்னை வினைப் பயனாலும் அரசுரிமையை யிழந்தது மாத்திர மன்றிச் சிறைக் களத்திலும் புகுந்து இரண்டாண்டுகள் வாழ்ந்து, பின்னர்ச் சிறைக்களம் நெருப்பினுள் மூழ்கிய காலையில் எவரும் அறியாமற் கரிகாலனாகி, வெளியேறி னன். அவன் கருவூர் நோக்கி நடந்து வந்தான். இறைவ னருள் அவனை அங்கு அழைத்து வந்தது. அவன் அப்பொழுது அரண் வாயிற்கருகிலே மனத் தளர்ச்சி யோடு மெல்ல நடந்து வந்த இரும்பிடர்த் தலையாரைக் கண்டான். அவரும் இழந்த பொருளைப் பெறுவார் பெற்ற ஆனந்த மெய்தியவரானார். ' ' பிடர்த் தலையார், தாம் இருக்குமிடம் புற நாட் டகத்ததென அறிவராகையால், தம்முடைய மனவெழுச் சியாற் பேசும் சொற்கள் மூலம் பிறர் அவ்விளவல் இன் னான் என்று அறிதல் தீதாக முடியும் என்று எண்ணித் தம்மை யடக்கி, அவனை மார்புறத் தழுவி, விரைவாக அழைத்துக்கொண்டு, தாம் வாழ்ந்திருந்த சிறியதொரு