பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41

________________

47 மனையகம் சேர்ந்தார். அங்கு அடைந்ததும், வாயிற் கதவங்களைத் தாழ் கோத்து, அகத்தே புகுந்து, வளவர் குலத்தோன்றலை ஒரு சிறிய மணையில் அமர்த்தித் தாம் அருகில் இருந்து, அவனை நன்கு கவனித்து, ஆபாத சூடம் நோக்கினார்'; பின்னர் மனமுருகி, " தூங்கெயில் எறிந்த தொடித்தோட்செம்பியன் குல விளக்காகிய கொற் றக் குமர, சென்னியர் தோன்றால், திருமாவளவ, என் உயிரினும் இனிய இளஞ்சேட் சென்னியின் இளமைந்த, நின்னை யான் இவ்வழியில் இந்நிலையிற் காண்பதற்கோ பிறந்தேன் ! நின் தந்தையாரிடம் யான் கொடுத்திருந்த உறுதியுறைகள் வெற்றுரைகளாயினவே! நினக்கு முடி. சூட்டி மகிழ்ந்த என் கண்கள் இக்காட்சியைக் காணவும் வலிபடைத்துளவே! என் வாய் மொழியை நிறைவேற்ற யான் என் செய்வேன் ! எவரை யடைவேன்! பாண்டி யரும் சேரரும் நின் தாழ் நிலை கண்டு மகிழ்கின்றார் என்றே எண்ணுகிறேன். நின் பொருட்டு உதவியாக நின்று அறப் போர் புரிய அவர்க்கு மனமில்லை. இதுவும் இறைவன் செயல்! நாம் இருவரும் ஓர் இடத்திற் சேர்ந் திருப்பதை நம் பகைஞர் காண்பராயின், நமக்கு இன் னும் என்னென்ன தீங்கு இழைப்பரோ? என்னே இக் கோலம் ! இஃது யார் செயல்? நின் கால்கள் கரிந்திருக் கின்றனவே! இதற்குக் காரணம் என்னை? சிறைக்கள வாழ்வின் சிறுமை பற்றாதென அக்கொடியோன் நின் னைத் தீவாய்ப் படுக்கவும் துணிந்தனனோ? என்னே அவன் துணிவு! என்னே அவன் மனவுறுதி ! என்னே அவன் வயிரம் ! அந்தோ ! என் மனம் பதைக்கின்றதே! நினக்கு இத்தீங்கு செய்த கொடியோன் எவனே யாயி