உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

________________

னும், அவன் நிலத்தில் உயிரோடு வாழும் அளவும் என் மனம் அமைதி பெறாது, என வருந்திக் கூறினர். இது கேட்ட திருமாவளவன், " என் அருமை அம்மானாரே, நீர் இருக்க எனக்கு இனி என்ன குறை - யுளது? எனக்கு இதுவரையில் நேர்ந்த தீங்குகள் ஒரு புறம் இருக்க இனி நாம் செய்ய வேண்டுவதைப்பற்றியே இப்பொழுது ஆலோசித்தல் வேண்டும். ஏனெனில், நாம் இருப்பதோ, அயலவர் நாடு, நாமோ, ஏதிலராய் ஆதுலராய் இங்கு மறைவில் வாழ வந்துளோம். எந்த வேளையில் எவன் என்ன செய்வனோ! ஆகையால், நாம் இங்கு மறை வாழ்விலும் வெகு ஜாக்கிரதையாகவே இருக்க வேண்டும், என்று கூறிச் சிறிது யோசனையி லிருந்தான். அமைச்சப் புலவர், அவன் கரிகாலனாகிய கார ணத்தை விசாரித்தறிந்தார்; பிறகு எல்லாம் இறைவன் செயல் என்று அமைந்தார். இனி விரைவிலே வளவன் நல்வாழ்வு பெறுவான் என்று அறிவராகையால், எதிர் கால நிலையைப்பற்றி அவனிடம் ஒன்றும் கூறாமலே, அக்காலம் உள்ள நிலையைப்பற்றிப் பேசியிருந்தார். பிறகு இருவரும் அருகிலிருந்த நீர் நிலை யொன்றிலே நீராடி இறைவனைத் தொழுது போற்றி, உண்டி பயின்ற னர். வளவன் நடந்து வந்த சிரமம் பரிகாரமாகும்படி அம்மனையகத்தே ஒரு புறமாகப் படுத்திருந்தான். பிடர்த்தலையார், 'இனியென் செய்வது?' என்று எண்ண மிட்டிருந்தார். அங்ஙனமிருக்கையில், வாயிலிலே பெருத்த முழக் கம் ஒன்று கேட்டார்; அம்முழக்கத்தின் காரணத்தை