பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43

________________

43 யறிய வாயிற்புறம் நோக்கினார்; சோழ நாட்டுக்களிற்றரசு பொற்குடமும் பூமாலையுங் கொண்டு நிற்கக் கண்டார்; உண்மையை ஒருவாறு ஊகித்துணர்ந்து, மனையகம் நோக்கினார். இதற்குள்ளே முழக்கத்தின் காரணத்தை அறிந்துகொண்ட வளவன் வாயிற் புறம் வந்தான். வாயிலிலே பெருங்கூட்டமாக நின்ற மாந்தர் பலர் கண்டு அதிசயிக்க, அங்கு அவ்வேழம் வளவன் முடி யிலே பொற்குட நீரை அபிஷேகம் செய்து, அவன் கழுத்திலே தான் கொணர்ந்த மாலையைச் சூட்டியது. விண்ணவரும் மண்ணவரும் வியப்பெய்த நிகழ்ந்த இத்தெய்விகச் செயலைக் கண்ட பிடர்த்தலையார், ஆனந்த மேலீட்டால், தம்மை மறந்தவரானார். ஒரு கணப் பொழுதிலே வளவர் பிரான் ஆடை மாற்றி நின்றனன். உடனே அவனை அவ்வரசுவா தன் கையால் தூக்கிப் பிடரகத்து வைத்துக்கொண்டு விரைந்து சென்றது. அஃது இன்னது செய்யும் என்பதை எதிர் பார்த்திருந்த பிடர்த் தலையார் உடனே புறப்பட்டார்; உறையூர் நோக்கி விரைந்து சென்றார். வேழ வேந்து வளவர் வேந்தைக் கழுமலத் திருக்கோயிலுக்குச் சுமந்து சென்று, அங்கே ஆவலோடு எதிர் பார்த்திருந்த பலர் முன்னிலையில் இறக்கியது. மங்கள வாத்திய முழக்கம் மிருந்தது. அங்கு நின்ற சான்றோ ரெல்லாம் தம் அர சர் குடியின் தவப்பேறாகப் பிறந்த செல்வனே தெய்வத் திருவருளால் தமக்கு அரசனாக வாய்த்தது கண்டு, பேரின்பம் எய்தினர்; அக்களிற்றை முன்னே நடத்தி அரசனை மனமார வாழ்த்திக்கொண்டு, உறையூர் நோக்கி நடந்தனர். இரண்டு தினங்களில் அனைவரும் உறையூர்