பக்கம்:சோழ மன்னர்-முதற் பாகம்.djvu/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

லாற்றை விளக்க உதவியாய் அமைந்திருக்கின்றது. இவ் வாறாக, நாம் சங்கச் செய்யுள் என்று பயில்வன வெல் லாம் நம் நாட்டுப் பண்டைத் தமிழ் மன்னர் வரலாற் றைத் தெரிவிப்பனவாகவே யுள்ளன. இவற்றால் நாம் அறியும் மன்னர் பலர் ஆவர் என்பதை இந்நூல்களை ஆராய்வதே பொழுது போக்காக வுடையோர் அறிவர். நம் நாட்டுப் பூர்வ சரித்திரத்தை வகுத்து எழுது தற்குரிய ஆதார நூல்களாக இவை அமைந்திருப்பன வென்பதைத் தம் நுண்ணுணர்வால் நன்கு அறிந்து வைத்தும், இந்நாளிலே புராதனமான எழுத்துருக்களை யாராய்ந்து, தென்னிந்திய சரித்திரம், தமிழ் நாட்டு வர லாறு என்பவற்றை ஆங்கில மொழியால் எழுதி உலகிற் குதவும் பெருமக்கள் இவற்றைத் தம் அரும்பணிக்கு வேண்டுமளவு பயன்படுத்திக்கொண்டதாகக் கூறுவதற் கில்லை. சமீப காலத்திலே காலஞ் சென்ற சரித்திராசிரி யர் ஸ்ரீமான். பி. தி. ஸ்ரீநிவாஸ ஐயங்கார் இத்துறையில் துணிந்து இறங்கி நன்கு முயன்று, தாம் கண்ட உண்மை களைத் ' தமிழர் வரலாறு ', ' ஆரியர் காலத்துக்கு முந்திய தமிழர் கல்வி நிலை' என்ற ஆங்கில நூல்களால் வெளி யிட்டனர். இவர் ஆராய்ச்சி தமிழொன்றே பயின்றறிந்த பண்டிதர் ஆராய்ச்சி முறைக்கு வேறுபட்டிருப்பதை இவர் நூல்களால் உணரலாம். சென்னைச் சர்வ கலா சாலையில் இந்தியசரித்திர ஆசிரியராயிருக்கின்ற ஸ்ரீமான் ராமசந்திர தீக்ஷி தர் பெரும்பாலும் தமிழறிஞர் பின்பற்று முறையையே பின்பற்றித் ' தமிழ் நூல் ஆராய்ச்சியும் சரித் திரமும்” என்ற பெயரால் ஓர் ஆங்கில நூல் வெளியிட் ளேர். இதன்கண்ணும் பழம்பொருள்கள் சில புது முறை