பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

மிர்ஸா கெம்பே லத்வியா

(பி. 1907)

இன்னிசை

பகலும் இரவும் தீஞ்சுவைப் பண்ணின்

இசையைக் கேட்கின்றேன்;

புகழ்சேர் புடவி தழுவிய பாக்கிசை

தொல்லை புரிகிறது.

பெரும்பேர் ஆற்றல் பீதுவன் பண்ணிசை

சுவரைப் பிளக்கிறது,

பெரும்புய லூடே சோசுதா கோவிச்

பீடுடன் வாதிடுவார்.

குருசெம் தீவின் கொழுத்த பொழிலில்

கொஞ்சும் மிடுக்குடனே, அரும்பேர் இசையின் கருவி முழங்கி

ஆர்க்கும் கூட்டிசையில்.

பின்னர் பால்டிக் பேரியாழ் பேரொலி

வெள்ளம் முழக்கிடுமே; இன்ப இலாத்துவிய ஓடை, ஆறுகள்

இசைக்கும் பண்ணினைப்போல்.

83