பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாளர்கள் நெறியுணர்வு திரட்டுவதற்குப் பகைவனுடன் . போர்செய்து வெற்றியைப் பெற்றிடப் பெருந் தொண்டாற்றி யுள்ளார்கள்.

போர்முனைகளில் பல எழுத்தாளர்கள் கொல்லப்பட்டனர். நம் இலக்கியங்களில் உடன்பிறப்புத் தன்மை குருதியிலேயே உயர்ந்தது. ஆயினும், போர்கூட ஒரு புதிய இலக்கியப் படையணி பிறப்பதற்கும் காரணமாயிற்று. போர்த்தீயின் நாவிலிருந்தே, திறமைசான்ற ஒரு புதுத் தலைமுறை எழுத் தாளர் தோன்றினர். செய்யுள்களும் விளைந்தன. அவை நம் நாட்டு இலக்கியத்தை வளப்படுத்தின. அவை வெறும் போர் நடவடிக்கைகளை விளக்குவனவாக மட்டுமன்றி எவ்வாறு இன்னல்கள் சோவியத்து மனிதனை எஃகாக்கியது என்பதையும் காட்டின. அவை உலகுக்குக் கூட்டுடமைச் சமூகத்தில் வந்து நிலைப்பட்ட புதிய மனிதப் பண்புகளைச் சோவியத்து மக்களும் தசையும் குருதியுமாய் ஆகிவிட்ட பண்புகளை உலகுக்கு காட்டின.

இதுவரை உலகம் கண்டிராத அத்தகைய வீரனுடைய தோற்றத்தை உருவாக்கியதில் சோவியத்து இலக்கியம் தலை சிறந்த பணியாற்றியிருக்கிறது. சோவியத்து இலக்கியத்தின் கருப் பொருளாய் அமைந்த புரட்சி வாயிலாக உண்மையாக்கப்பட்ட மக்களின் மகிழ்ச்சியான வருங்காலம் எனும் கனவே அஃது என்று கூட ஒருவர் கூறலாம். இது முன்னர் உலகிலிருந்தும் இலக்கியங் களிலிருந்தும் வேறுபடுத்திக் காட்டப்படுவதாய் அமைந்தது. சோவியத்து இலக்கியம் மனித இனத்தின் வருங்கால வாழ்விற்குப் பின்வழித் தோன்றல்கள் விழிக்காக வலியுறுத்திப் போர்க்கால ஆண்டுகளில் பணியாற்றிய மனிதப் பண்பினைத் தீட்டுவதாய் இருக்க வேண்டியிருந்தது. சோவியத்துப் படையில் எல்லாச் சோவியத்து நாட்டினங்களிலிருந்தும் வந்த பிரதிநிதிகள் தோளோடு தோள் இணைந்து போரிட்டனர். சோவியத்து இலக்கியம் நெடுநாளாகக் கனவு கண்டுவந்த அதே வீரன் கொடுங் கோன்ைைமயத் துரோடு துடைத்தெறிந்து பெர்லின் நகருக்குள் முன்னேறினான் என்று சொல்லலாம். அந்த உயர்ந்த, திறம்மிக்க சோவியத்துக் கவிஞர்கள் எழுத்தாளர்களின் இனம், போரின் செழுந்தணலில் உருகி ஒன்றாகிவிட்டது.

சோவியத்து இலக்கியம் மேலை முற்போக்கு எழுத்தாளர் களுக்கு ஒளிகாட்டி அழைக்கும் விளக்காயுள்ளது. அதில் மக்கள் ஒற்றுமைக்கும் நட்புக்கும் சின்னங்களாக ஒளிரும் உயரிய

xiv