பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பறவைத் திரளில் பறவைகள் கூடும்; ஆங்கது போலவே, ஆர்வம் துாண்டிடக் குதிர்களுக் குள்ளே கூலம் குவியுமே.

மாந்தனும்தன் உடன்பிறந்த மாந்தன் தன்னை மகிழ்வுதரும் நண்பனாய்க் கொளநி னைப்பான்; மாந்தன்இங்கு மாந்தனாக முயலு கின்றான்; மனவளத்தால் செயல்திறத்தால் அதற்கு ழைப்பான். ஆந்துணையும் முடிவின்றி நீளும் இந்த அண்டத்தில் இது.அவனால் முடியும் அன்றே.

சுவடுகள்

இன்ப வளமனைக் கோ.ஒர் குடிசைக்கோ

ஏகிடும் வேளையிலே,

முன்முக மண்டபம், மூலை ஒடுக்கத்து

முன்னே நுழைகையிலே,

நெஞ்சை மகிழ்விக்கும் நீளிசை கேட்டு

நெருங்கும் இடத்தினிலும்,

செஞ்சொல் இயம்பிச் சிரித்து விருந்தேற்கும்

சின்னக் குடிசையிலும்,

துப்புர வான தரையில்உன் சுவட்டினைத்

துடைத்திட நேர்ந்ததுவா?

ஒப்புர வாலுனை ஏற்ற விருந்தினர்

உள்ளம் உவந்தபின்னர்

கதவை அடைத்து நீவிடை பெற்றபின்

கசப்புணர் வால் அவர்கள் உதட்டைப் பிதுக்கும் நிலையடைந் தனரா

உரைப்பாய்? அல்லது நீ

I 29