பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57

யோஸ்வ் நோனாஷ்விலி ஜியார்சியா

(R. 1920)

ஜியார்சியப் பாடல்

பச்சைக்கொடி முந்திரிக் கொழுநிழலில் வாழ்வுதரும்

பாங்குமிகு தொட்டில் இதுவே: இச்சையுடன் பாடகரும் இன்னினிய காதைகளை

இன்புறவே பாடும் இடமே: மெச்சுபுகழ் உருசுவெலி மேவும்இசை நெஞ்சமதில்

மிக்கிணிமை ஊட்டி மகிழும்; நச்சுபுகழ் ஆண்மைமிகு போர்மதுகை நாளும் எமை

நயந்துநனி ஊக்கி வருமே.

எந்தையர்கள் விரும்பிமகிழ்ந் தின்பமுடன் செங்குருதி

ஈந்த அரும் நாடும் இதுவே: உந்தி.எழும் எங்குருதி ஓங்கும்.உழைப் பொன்றதனால்

ஒள்ளெரியின் வெப்பம் உறுமே. பந்தின் எழும் அவ்விசையின் பறவைதரு பண்ஒலியும்

பனிஒளிரும் மாம லையுமாய் மந்திரத்தால் எழுந்ததுபோல் மாண்புமிகு பேரழகாய்

மண்ணினின்று மேலெ ழுந்தனை!

I 4 3