பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரவின்ஒளி பரவுமட்டும் கழுகினங்கள் செல்லும் விரைவுடனே மானினங்கள் குதித்தெழுந்து பாயும் பரவும்.எழில் நிலமென்று சியார்சியநா டென்றார் கருதிவைத்த பெயர்.இதுவும் கவின்பொருத்தம் தானே.

இங்கினிய இளைஞர்இதழ் பாடுகிற இயவன்ன,

ஊர்முலியின் ரீரோவி னுடைய பொங்கினிய பண்ணின்ஒலி எவ்விடமும் புத்தமுதாய்ப்

புகழ்பொலியக் கேட்க வருமே. தங்குபந்தற் கால்களையே தழுவுகொடி முந்திரிகள்

தழைத்தொளிரும் காட்சி யுடனே எங்கும்ஒளிர் கோதுமைகள் விளையும்வயல் காட்சிகளும்

இனிதுமகிழ் பாடல் தருமே,

கனிகளையும் பருப்பினையும் உடன்பிறந்தார் போலமர்ந்து

பகிர்ந்துண்டு களிப்பர் மக்கள் இனிய இளஞ் சிறுவர்களும் பங்குபெற வழக்கிடுவர்

தன்னலம் எள் அளவும் இல்லை. தனைமறைக்காத் திறந்தஉளம் தத்தமக்குள் நம்பிக்கை

தழைத்தோங்க அன்பு மிகுவார், நனிமுழுதும் வழங்கிடுவார், தடைச்சுவர்கள் சிறிதுமிலா

நல்லுளத்தின் பெருமை திகழ்வார். y

‘விருந்தினர்கள் வரல்கடவுள் விளைத்த வரமாகும்’இருந்தபெரி யோர்கள்உரை இது என்று தேர்வோம்; திருமருவு நிலம்என்று சியார்சியநா டென்றார் அருமொழியில் வைத்தபெயர் அதுபொருத்தம் தானே.

ஒடுகிற அயோரின்னும் ஆற்றின் நெடுங்கரையில்

ஒடிவிளை யாடு சிறுவர், கூடுசிறு குதிரைஇணை வண்டியினில் ஏறிவான்

கோழியினைக் கூவி அழைப்பர். பாடுபழம் புகழுடைய திபிலிசியின் கோட்டைமதில்

பகைவர்களும் துயர முறவே நீடுயரம் நெருங்கிடுதற் கரியவணம் எழுப்பியவர்

நிகரில்திறம் திண்மை அருமை!

144