பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67

மக்சிம் ரில்ஸ்கி உக்ரைன்

(1895-1965)

நட்புறவு

நான்அறிவேன் ஒருமலரைப் பனிக்குழந்தை என்பர் நல்லழகும் இல்லையதில் நறுமணமும் இல்லை, ஆனகுளிர் பணிக்காலம் வரும்வரைக்கும் எங்கும் அடர்ந்தெங்கும் அடுக்கடுக்காய் அதுமலர்ந்து திகழும். ஆர்ப்பாட்ட வடிவில்லை மேன்மைஎழில் இல்லை; அமைதிமிக இருந்திடினும் தன் தகுதி உணரும்.

சிறப்புறுத்தும் நிறமில்லை, மணங்கூட இல்லை; தேன்சுவையோ குறையில்லை; மிகையில்லை; மேலும் பிறன்காலில் வீழ்ந்திரந்து கெஞ்சுவதும் இல்லை; பேசும்எல்லாப் பருவத்தும் தானிருந்து வாழும், வாழ்வதிலும் பூப்பதிலும் வலுவிழப்ப தில்லை; வீழும்உறை பனியில்தான் அதுசோர்ந்து வீழும்.

மாந்தரிடை நட்புறவும் இத்தகைய தாகும். வன்மைமிகும் உழைப்பினிலும் போரினிலும் ஒன்றி ஏந்துபுயல், போராட்ட எதிர்ப்புகளைத் தாங்கி எஃகெனவே அசைக்கவொணா உறுதிநிலை கொள்ளும்; தொல்லையினைத் தோல்வியினை அஞ்சாமல் எதிர்க்கும்; புல்லியதாம் புறப்புனைவு தேவையோ அதற்கும்?

I 64