பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பனிக்காலத்திற்குப் பிரியாவிடை

மரங்களுடன் மலைகளுமே பணியால்உடை புனையும், , வாரம்பல கழிந்திடவும் வறட்சிமெலத் தோன்றும்; பிரியும்உனை வழியனுப்ப வருந்தமுறு கின்றேன்; பெப்பனியைப் பணிப்புயலைப் பிரியமனம் இல்லேன்.

வெண்பனியின் இன்னொளியால் கண்கூசச் செய்வாய் வியப்புறும் உன் பேரெழிலில் வாழ்க்கைபல மறையும். அண்மையிலே ஆனபனிப் பாதைமறை வுறல்போல் அருவாழ்வின் தடம்மறைய அடக்கிஒளிர் கின்றாய்.

இறுதியாய்வான் வெண்மீனின் அடியில் நிற் கின்றேன் இம்முறைபோல் இனியுன்னை நான்காணற் கில்லை. நொறுக்குகிறேன் பணித்திரளை என்கையில் ஏந்தி நொறுக்குவதேன்? காரணம்ஏன்? நான்அறிகி லேனே.

178