பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

அலெக்சி சுர்கோவ் உருசியக் கூட்டரசு

(19. 1899)

ஒருசிறுமி உறங்குகிறாள்

வழிப்போக்கில் ஸ்டாலின்கிராட் வழியாகப் போனேன். மடிந்ததுயர்ச் சாம்பலில்பின் மலர்ந்தந்த நகரம். வழிதிரும்பும் போதில்போர்க் குறிப்புகளைத் தேடி நிலைப்பேழை இருந்தெடுத்துப் பிரித்துப்பார்த் திட்டேன்.

எரிப்பூட்டும் தீயபுகை மூச்சடைக்கும் அறையில், எரிகுண்டால் மீண்டும்சுவர் நடுங்குதல்போல் தோன்றும். விரிநிழலில் இருந்தாழ்ந்த கொடியதொரு நோக்கால் விரைந்துளத்தைத் துளைத்ததுவே வெங்கொடிய போரே.

பின்பணியின் புயற்காற்றோ உயிர்இலாச்சிற் றுரைப் பேயான சுழற்காற்றால் பிடித்தாட்டல் உணர்ந்தேன்; என்றாலும் ஒருசிறிய பெண்குழந்தை நன்றாய் எந்தஒரு துயரற்றுக் காப்புடனே உறங்கும்.

கண்மூடி இருந்தாலும் அறிதுயிலில் விதும்பும். கருநீல ஒளிவிழியை இமைமூடித் தழுவும். கொண்டாடும் அவள்கனவோ மிகஇனிய வாகும் கொடியஎன்றன் கனவுகள்போல் நெஞ்சைஅவை எரிக்கா!

197