பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முகில்படியாத் தெளிவான்போல் குழந்தையதன் இளமை முரணச்சம் குருதிவெறி அங்கில்லை. எனினும், திகிலுண்டு, தீச்சகுனம், தீக்குறிகேட் கின்றேன் திரும்பவும்பாழ்ப் போர்வெறியே எதிரொலிக்கு தந்தோ!

ஒநாய்போல் பிணம்தின்னும் மனிதப்பேய்க் கூட்டம் அவுஸ்விச்சில் எரியுடலை மீண்டும்தினக் கத்தும்; ஈரோசி மாச்சாம்பல் இப்பொழுதும் வீழ்ந்து குருதியினை எரியூட்டும் எச்சரிக்கை செய்யும்.

கோடையிடி மின்னலிலே குண்டொலியே கேட்பேன், கூடும்ஒர் அமைதியில்என் நரம்பிறுகி நிற்கும். பீடைஎன எனைப்பிடித்த எண்ணங்கள் இன்றிப் பேரமைதி யில்துயில்வாய் பெண்ணமுதே பிள்ளாய்!

என்பேத்தி யேஉறங்கு, ஸ்டாலின்கிராட் நகரம் எரிகையில்என் மயிர்வெளுத்த தானாலும் நன்மை: செந்நீரில் வரைந்த அந்தக் காட்சிஇனி மீளா. ஒரழிக்கும் கொடுமைகளைச் சீரழிப்போம் யாமே.


மாலைப்பொழுது; மீன்நிறை வானம்; சுகுமிப் பெருநிலையம் மாந்தன் பக்கத் திருந்தான் தனியே சிந்தனைப் போக்கினிலே நீல வானைச் சுட்டிக் காட்டி உணர்ச்சிக் கட்டுடனே பாரீர் துணைக்கோள் அதுதான்’ என்றான் கிளர்ச்சி நிலையுடனே.

முழங்கை தொட்டுநின் றங்குப் பார்த்தேன் முடிவில் விண்மீன்கள் மூரலாய் மின்னி விளையாட் டயர்ந்தன. நாங்கள் மிகுசிறிதாய்

198