பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

நிக்கொலாய் திகனோவ் உருசியக் கூட்டரசு

(1896-1979)

எதிர்காலத்திற்காக

ஆயிரத்துத் தொளாயிரத்து இருபதாம் ஆண்டில் ஆடிமாதம் பத்தொன்ப தாம்நாள் தன்னில் மீயுயர்ந்து பரந்த அரண்மனைச் சதுக்கம் வெவ்வேறு நிறமாந்தர் குழுமி நின்றார், பாய்ந்துருளும் வெள்ளம்போல் உலக நாட்டின் படைபோலும் வலியர்அவர் சேர்ந்தி ருந்தார்.

மூன்றாவது அகிலத்தின் பேர வைக்கு முன்னிருக்க அவரெல்லாம் அனுப்பப் பட்டிார்; ஆங்கிருந்த அரண்மனையை வியந்து பார்த்தார், அதன்சிறப்பை முற்றும்இழந் திருக்கக் காண்பார். தூணில் தனி யேநிற்கும் அரமகள் போல தொல்சிறப்பை அதுவிழந்து வெறிதாய் நிற்கும்.

பேராள்கள் காண்பதெலாம் வியந்து கண்டார் பெருமனையின் வளைமுகட்டில் பரிதேர்ச் சிற்பம் சீரோங்கும் பேரறைகள் யாவும் கண்டார்; இன்றங்குத் தொழிலாளர் உரிமை யோடும் நேராக நடக்கின்றார்! சதுக்கம் தன்னில் நீடுபெருந் தலைமைலெனின் உடன்ந டப்பார்.

209

14