பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடந்திட்ட முன்னாளின் இராக்கள் தம்மை நினைந்தபடி கடந்திடுவார், அந்த நாளில் ஊர்ப்புறத்தே ஒளிமங்கும் சேரிப் பாங்கில் நடந்திடுவார் அதையெல்லாம் எண்ணி எண்ணி நடந்திடுவார் விரிந்துயர்ந்த அரண்ம னைக்கண்.

அவர்படித்துப் படிப்பித்தார் எதிர்கா லத்தில் ஆகின்ற நற்செயல்கள் பயன்கள் தம்மை! அவர்களோ மேலான போராட் டத்தின் அடர்வெற்றிக் கனவுகளில் மிதந்தி ருந்தார். அவர்உவந்து நடக்கின்றார் தொலைவி” லிருந்து வந்த அருந் தோழருடன் அருகி ருந்தே.

“புகழ்மிகுந்த ஒருநாளில், பணிதான் இங்கே முடிந்ததுவே: எம்முடைய நாட்டிற் கேகி உகந்த இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த உழைப்பதெங்கள் உயிர்க்கொள்கை’ என்று அவர்கள் மிகமுழக்கம் செய்திட்ட உறுதிப் பாட்டைத் தோழர்லெனின் வேட்புடனே கேட்டு உவந்தார்.

அரண்மனை, தோரண வாயில், இளங் கருங்கற் சதுக்கங்கள் அத்தனையும் எம்.நூற் றாண்டின் திறம்பொருந்தப் புத்தமைப்பில் விரிந்து நிற்கும், வரலாற்றின் வெம்மைமிகு மூச்சுக் காற்று நிரம்பியங்குப் பரந்திருக்கும், மக்கள் நெஞ்சில் நேவாவின் குளிர்நடுவில் வெம்மை ஏற்றும்.

தோழர்லெனின் உறுதியுடன் அமைதி யாகத் துணிவோடு நம்பகமாய் நிற்கக் காண்பேன். நேவாவின் கடற்காக்கைக் குரல்மட் டுந்தான் நிமிர்ந்தொலிக்கும்; மக்களிடை அமைதி சூழும். தோழர்லெனின் பேரவையில் பேசி நின்றார் தெளிவாக உயர்ந்தொலித்தது அவர்கு ரல்தான்.

2 I 0.