பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐம்ப தாண்டுகள் அகன்று விட்டன: பரபரப் பான வளமிகு வாழ்க்கையால் ஆண்டுகள் கழிந்ததை அடியொடு மறந்தேன். திரும்பேன் அந்தப் பழையநாள் களுக்கே என்.உள் உணர்வுகள் நின்று பொலிகையில் லெத்தியின் ஏரிக் கரைமீது அமர்ந்து விரும்பிய இடங்களில் பொருந்திநிற் பேனே.

வேனில் பாட்டு

இங்குள்ள எல்லாமே எனக்குப்பின் வாழும் இளம்புட்கள் கூடுகட்டும் சிறுபெட்டி யோடு. பொங்குற்ற கடல்மீது புரண்டுமகிழ்ந் தாடிப் புக்குவந்தே எனைத்தழுவும் பூங்காற்றும் வாழும்.

இங்கென்னை எல்லைஇலாக் காலங்கள் அழைக்கும், இடைநீங்கா அவ்வழைப்பை மறுத்திடவா முடியும்? செங்கனிகள் கொழிக்கின்ற செரிமரத்து மீதில் சீதமதி தான்மிதந்து மலரில்ஒளி கிளரும்.

எங்கும்.அடர் பசுங்காட்டில் வெண்ணிறமாய் மின்னி ஏகிடும்ஒர் பெயர்இல்லாப் பாதையிலே நானும் பங்கம்இலா உரிமையொடு செலவேண்டும் போலும், பரந்தங்கே பளிச்சிடும்.அம் மரங்களின்ஊ டாக.

அங்கங்கே காட்டினிலே ஏரியினைத் தாண்டி அலைகின்ற தடம்போல்என் பாதையுமே செல்லும்.

I 0