பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரட்டை அடிமரங்கள் இணைந்து வளருகையில் உரமற்ற மண்ணுக்குள் ஆழமாய் ஊன்றிவிடும்: மேலே உயர்ந்திணைந்து காற்றில்விளை யாடுகையில் சால முடிபுனைந்து நிழல்கவிகை ஆகிடுமால், என்நகராம் கோல்கொதாவில் இணையாக வேரூன்றி இன்பமும் துன்பமும் என்னைஆட் கொண்டிடுமால், ஒன்றிணைந்து புத்தம் புதுநாளாய் உயர்ந்தெழுமே.

இப்பொழுது புயல்சுழலும் உச்சியை நோக்கிஎழும், கப்பிக் கவிழாமல் ஆண்டு பலகழிய என்ஆன்மா விடுதலையால் கோபுரமாய் வளர்கிறது. ஒன்றாக, இவவுலகம் உவநதளிக்கும் உரிமையதே.

ஒரு மறுமொழி

உனக்கொன்று உரைப்பேன் ஒர்ஆண்டு கூட வீணாய் வாழ்ந்த தேஇல் லைநான். உற்ற பிழைக்கா உற்றிலேன் வருத்தம், கற்றவை தம்மை எண்ணிக் கலங்கிலேன்; பொய்யாப் பரிசில் எவர்க்கும் ஈந்திலேன். நலம்இல் லாததும், பாதுகாப்பு அற்றதும், பொருளி லாததும் ஆகிய காதலில் பொருந்திய தில்லை. காதலின் தூய கவின்ஒளி என்றும் எப்போதும் என்னுளே உள்ளது; புதுமலர்ச் சிக்குப் பொழுதிங் குள்ளது. வறுமையி லிருந்து வளர்ந்துமேல் செல்லலாம்; ஆயினும், இறந்த காலத்தைத் துாற்றுதல் தவிர்க; நினைவும் துயரும் துறப்பதைத் தவிர்கவே.

25