பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



அன்பிற்கும் பாடற்கும் அல்லற் கும்நான் அட்டியின்றி என்னுளத்தை ஒப்ப டைப்பேன்...... அன்பே,நான் தரும்துன்பம் மன்னிப் பாய்நீ ஆனால்நாம் பிரிந்திடினும் என்றன் ரத்தம் இந்நிலத்தில் கசிந்திடினும், இதும கிழ்வே. எனைத்தின்னும் அச்சம், ஆம், கடுமை அச்சம். என்னில்வரும் சோதனைகள் வெறுமை, மற்றும் இடர்செய்யும் பழந்துயர்கள் எனினும் இன்பம்.

புயலிடையில் மரங்களினைப் போன்று நின்றன் புண்உரைகள் எனைமோதும், கண்ணிர் பொங்கித் தியங்குகின்றேன் வாயடைத்துப் போகின் றேன்.நான். தீராத மனத்துயர்தான் அதற்கே நீயும் வயவுகளை நிறுத்தாதே; மன்னிக் காதே. காதல்ஒரு போதும்மன் னிப்ப தில்லை; முயங்குகின்ற மகிழ்ச்சியுமே இப்ப டித்தான்; முனைந்துயரும் பேராற்ற லுடன்காத லும்தான்.

துயர்உறுத்தும் அழித்துஒழிக்கும், துளிஇ ரக்கம் காட்டாது; தூய்காதற்கு இரக்கம் ஏது? மயற்காதல் வாழ்க்கையிலோர் விளையாட் டன்று; விளையாட்டுப் பொருளும்அன்று; தெளிதல் வேண்டும் இயற்கையிலே காதல்என்ப தென்ன? ஐய இன்மகிழ்ச்சி ஆற்றாமை இரண்டும் அன்றோ!

26