பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதிரவன் மலைவாய் வீழ்ந்து மறுபடி காலைப் போதில் கவினுற விழித்தே உலகில் நானிலா முதல்நாள் அதனைத் தொடங்கிவைத் திடுவான். தொடர்ந்துநான் வாழாது இனிவரும் பல்லா யிரநாள் களுக்கும் அதுதான் முதல்நாள் ஆகுமே அன்றோ! என்றன் இனிய புல்வெளி நிலமே! என்றன் இல்லமே! என்றன் தோழனே! பரிதியின் ஒளிக்கீழ் பரந்து விரிந்துநீ வாழ்க்கையைப் போல வரம்பற் றிருப்பாய். எல்லையும் முடிவும் இல்லாது இயங்குவாய் இதோநான் பாடல் இசைத்துக் கொண்டே என்றன் வழியில் ஏகிட லாயினேன். விண்ணை முட்டும்அப் பண்ணின் பெருங்குரல் விண்மீன் கணத்தொடு மின்னிப் பிணைந்திடும். ஆயினும் வான்அரங்கு இருந்தப் பாடல் உடுக்கள் நிறைந்த ஒருநாள் இரவில் மெல்லென நிலத்தில் இழுமென இழியும்; புத்தம் புதியதாய்ப் பிறந்த குழந்தையின் அழகிய தொட்டிலின் அருகில் இனியதா லாட்டாய் என்றும் வாழுமே.

40