பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உறுகடுப் புடனே தாராள மாக ஊற்றுகள் சுரந்தனவே

செறுபெருங் காட்டில் அவன்குறி தப்பிய

சேவல் போல்முழங்கி,

நின்றிடும் அவனை நோக்கியே உலகம்

நிறைந்த பழிஉணர்வால்

கன்றிய குரலால் தொண்டை உவந்தே

கழுத்தொலி எழுப்பியதே.

அவன்பற்கள் குளிர்காற்றால் கிட்டிப் போகும் அவன்தன்துப் பாக்கியினை மூழ்க விட்டான்...... அவன்தந்த புண்ணினையும் மறந்த பிர்ச்சு மரம்.அவனின் வேட்கைக்கு வழங்கிற் றன்றே.

பாதிகள் எனக்கு வேண்டா,

அரைகுறை வெறுக்கின் றேன்.நான்

மாநிலம் முழுதும் ஈவீர்

வான்அரங் கனைத்தும் தாரீர்.

நீணில மலைகள், ஆறு,

நெடுங்கடல் இவற்றின் செல்வம்

யானலாது எவர்க்கும் பங்கை

அளித்திடேன் எனக்கே யாவும்.

வாழ்வேநீ குழைந்தி டாதே,

வழங்கிட முணங்கி டாதே,

வீழ்முழுச் சுவையும் ஈவாய்

வெற்புஎனும் தோள்கள் உண்டே!

5