பக்கம்:சோவியத்துக் கவிஞர் நூற்றுவர்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

ரஸால் கம்ஸாத்தாவ் தாகிஸ்தான்,

உருசியக் கூட்டரசு (tol. 1923)

என் தாய்மொழி

உறக்கத்தில் மடத்தனங்கள் அலைக்கும் போலும் ஓரிரவு நான் இறந்த கனவு கண்டேன்; பிறர்எவரும் காணாத மலைஇ டுக்கில், பிணமாகக் குண்டுபட்டுக் கிடக்கக் கண்டேன்.

பெருமுழக்க முடன் ஒடை ஒருபால் ஒடும், பிறர்உதவி வரும்என்று பேத லித்தேன். ஒருகணத்தில் மண்ணோடு மண்ணாய்ப் போகும் உடல்மண்ணில் உயிர்ப்பு:மெல ஒடுங்கக் கண்டேன்.

நான்இங்கு இறப்பதனை அறியார் யாரும், நடுவானில் வட்டமிடும் கழுகின் கூட்டம் மான்ஒன்றோ இரண்டோபே ரச்சத் தோடு மருளுவதை விழிகாணும் வேறொன்று இல்லை.

எதிர்பாராது இறக்கின்ற என்னைக் கண்டே இரங்கிஉளம் பதறிஅழ யாரும் இல்லை முதியஎன்றன் தாயாரோ, மனைவி, நண்பர் மொய்த்துஎன்பால் துயர்உறுவோர் யாரும் இல்லை.

57