பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொதுக் குறிப்புகள் குழந்தை, இளைஞன், முதியோர் ஆகியோரிடம் மறைந்துள்ள ஆற்றல்கள், திறமைகள், மனிதப் பண்பு ஆகியவற்றை வளர்க்கும் வழி, கல்வி என்பதாகும். கல்வி தனி மனிதனுடைய முழுமையான ஆளுமையை வளர்ப் பதற்குக் கருவியாக இருப்பதைப்போல், இவ்வளர்ச்சி யையும் சமுதாயத்தின் தேவைகளையும் இணைக்கும் கருவி யாகவும் உள்ளது. சமுதாயத்தின் தேவைகளையும் தனி மனிதர்களின் வளர்ச்சிகளையும் பொருத்தி வைப்பதில் வெற்றி பெறும் அளவிற்கே, ஒரு கல்வி முறை, பயனுள்ள கல்வி முறையாக விளங்கும். சோவியத் கல்வி முறை, இந்தக் காலத்தின் சோதனையில் வெற்றி பெற்றுள்ளது. கல்வியின் மதிப்பையும் பயனையும் எல்லா நாடுகளி லும் எல்லாக் காலங்களிலும் அறிஞர்கள் உணர்ந்து வந் துள்ளார்கள். ஆளுல்ை, கெட்ட வாய்ப்பாக, பொது மக்கள், குறிப்பாக, பாடுபடும் பாட்டாளிகளும் குடியான வர்களும் கல்வியின் முக்கியத்துவத்தை உணரவில்லை. அநேக நாடுகளில், நாடு தழுவிய கல்லாமையும் அறியாமை யும் தாண்டவமாடின. அவ்வக்கால அமைப்புகளின் நலனுக்கும் பிரபுத்துவ முதலாளித்துவ தன்னலத்திற்கும் கல்லாமை உதவியாக இருந்தது. பல நூற்ருண்டுகளாக, பல நாடுகளில், எல்லா அரசுகளுமே, பொது மக்களுக்குக் கல்வி தேவை என்பதை பொருட்படுத்தவில்லை. இரஷ்ஷியாவை முன்னர் ஆண்ட ஜார் ஆட்சி, இதற்கு விதிவிலக்கு அல்ல. ஜாரின் பேரரசு, எல்லா வித வறுமைகளுக்கும் உறைவிடமான பெரும் நாடாக இருந்தது. வாழ்க்கைக்கு வேண்டிய பொருள்களுக்குப் பஞ்சம்: கல்வி, கலையுணர் விற்கும் பஞ்சம். I()