பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1897 ஆம் ஆண்டின் இரஷ்ஷியக் குடிக்கணக்கின் படி, ஒன்பது வயதிற்கு மேற்பட்டவர்களில், நூற்றுக்கு 28.4 பேர்களுக்கே, எழுதப் படிக்கத் தெரியும். இரஷ் வியப் பேரரசின் கோடியில் வாழ்ந்த, இரஷ்ஷியரல்லா தாரின் நிலை, இதைவிட மோசமாக இருந்தது. இரஷ்ஷிய ரல்லாதார், அநேகமாக, எல்லோருமே தற்குறிகள். தாஜிக் மக்களில், நூற்றுக்கு 0.5 பேரும், கிர்கிஸ் மக்களில், நூற்றுக்கு 0.6 பேரும், துருக்குமேனியர்களில் நூற்றுக்கு 0. 7 பேரும், உஸ்பெக்கியர்களில் 1.6 பேர்களும், கலைக் மக்களில் நூற்றுக்கு இருவரும் மட்டுமே எழுத் தறிவு பெற். றிருந்தார்கள். இக்கோர அவலத்தை மேற்படி குடிக் கணக்கு எடுத்துக் காட்டிற்று. நாட்டிலுள்ள எல்லாப் பகுதிகளிலும் ஒன்றிணைந்த பொதுத் தொடக்கப் பள்ளி கள் இல்லாமை, இத்தகைய இருண்ட சூழ்நிலைக்குக் காரண மாக இருந்தது. இரஷ்ஷியரல்லாத தேசிய இனங்களே. இரஷ்ஷியர்களாக மாற்றும் கொள்கையை, ஜாராட்சி பின்பற்றியது. இதல்ை, இரஷ்ஷியர்கள் பெற்ற அளவு குறைவான கல்வியையும் அறிவொளியையும்கூட பெற முடியாது இரஷ்ஷியரல்லாதார் அவதிப்பட்டார்கள். ஆண், பெண் இருபாலாருக்குமிடையே இருந்த வேறுபாடு மேலும் மோசமாக இருந்தது. ஆண்களுக்கு எட்டிய அளவு எழுத்தறிவுத் துளிகள் கூட பெண்களுக்கு எட்டவில்லை. சோவியத் ஆட்சி ஏற்படுவதற்கு முன்பு, வாழ்நாள் முழுவதும், கல்லாமையிலும் அறியாமையிலும் மூழ்கிக் கிடந்த ஆண்கள் விழுக்காட்டை விட பெண்கள் விழுக்காடு அதிகமாக இருந்தது. தொழிலாளிகள், குடியானவர்கள். கைவினைஞர்கள், பெட்டிக் கடைக்காரர்கள், ஆகியோரின் குழந்தைகள் உயர் நிலைப் பள்ளிகளில் சேர்க்கப்படவில்லை. அவர்கள் தொடக்கப் பள்ளிகளில் படிக்க முடிந்தாலே பெரிய காரியம். அப் பள்ளிகள் , பண்னைப் பணிகளுக்கும் சிறு கைத்தொழில் களுக்கும் தேவையான பயிற்சிகளைக் கொடுத்தன. பள்ளிச் சம்பளமோ அதிகம்; வறுமையோ வாட் டிற்று: சிறுவர்களுக்குக் குறைவான கூலி கொடுத்து, II