பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேலே வாங்கிச் சுரண்டும் முறை பரவலாக இருந்தது. இத் தகைய சூழ்நிலையால், பள்ளிக்குச் செல்லத் ,ெ தாடங்கிய ஏழைப் பிள்ளைகளில் எண்ணற்ருேர், பாதியில் படிப்பை விட்டு விட்டார்கள்: பண்ணைகளுக்கும் ஆலைகளுக்கும் கூலி களாகச் சென்று விட்டார்கள். மக்களில் பெரும்பாலோருக்கு எழுத்தறிவு கூட இல் லாத கேவலத்தைப் பற்ற அப்போதைய ஆட்சி கவலைப் படவே இல்லை. வறுமையும் வாட்டமும் தவிர்க்க முடி யாதவை என்று ஜார் ஆட்சி ஏற்றுக்கொண்டது போலவே, மக்கள் கல்லாமையும் தவிர்க்க முடியாத ஒன்று என்று கருதிற்று. s I S. s. 6ஆம் ஆண்டி ல் ஜாரின் அதிகாரிகளின் பதிப் பீடு என்ன தெரியுமா? இரஷ்ஷிய ஆண்களிடையே கல் லாமையை ஒழிக்க 180 ஆண்டுகள் பிடிக்கும். இரஷ்ஷியப் பெண்களிடையே 300 ஆண்டுகளுக்குப் பிறகே, கல்லா மையைப் போக்க முடியும். இரஷ்ஷியாவின் விளிம்பு 'களில் வாழும் பிற தேசிய இனங்கள். முழு எழுத்தறிவு பெற ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகும். இவை திகைப் i. பையோ அதிர்ச்சியையோ உண்டாக்கவில்லை. சுரண்டல் முறைச் சமுதாயத்திலே - கல்வியை அடிப்ப.ை உரிமை களில் ஒன்முக ஏற்றுக் கொள்ளாத சமுதாயத்திலேவேறெதை எதிர்ப்பார்க்கக் கூடும்! பட்டாளத்தில் சேர்க்கப்பட்ட எல்லாக் குடியானவர் களும் தற்குறிகள் என்று கேள்விப்பட்ட ஜார் ஒருவன். 'கடவுளேப் போற்றுதும் என்று முழங்கிளுைம். அரசர்கள் போக்கு இப்படி இருந்தது. - ஜாரின் மிகப் பெரிய அதிகாரியின் காட்டுக் கால போக்கைக் கவனிப்போம். அவ்வதிகாரி, ஒரென்பர்க், இராணுவ ஆளுநருக்கு எழுதிய கடிதமொன்று பாதுகாக்கப் பட்டிருக்கிறது. அக்கால ஆட்சியாளர்களின் சிந்தனைக்குச் சுவையான சான்றல்லவா? கிர்கிஸ் மக்களுடைய நிலையை உயர்த்த வேண்டு மென்னும் பரோபகார எண்ணம் என்னை ஆட்டி வைக்க I2