பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வில்&ல. அவர்களுக்கு அறிவொளியைக் கொடுத்து, ஐரோப் பிய இனங்களுக்குச் சமமாக வளர்க்க வேண்டுமென்பது "என் நோக்கமல்ல. கிர்கிஸ் மக்கள், கால காலத்திற்கும் இடையர்களாகவும் நாடோடிகளாகவும் இருக்க வேண்டும், நிலமுடைய விவசாயிகளாக மாறக் கூடாது, என்பதே என் ஆழ்ந்த விருப்பம். அவர்கள், விஞ்ஞான அறிவும் ஏன் கைத் தொழில் அறிவும் பெரு:திருப் 1தையே நான் விரும்புகிறேன்.' மிகப் பெரிய அதிகாரியின் காட்டுக் கால நினைப்பு எவ்வளவு வெறுக்கத்தக்கது: சோவியத் ஆட்சி ஏற்படும் வரை இத்தகைய பேக்கே ஆட்சி செ ப்து வந்தது. பரந்த கல்லாமை, அறியாமைக் கருமேகங்களிடையே, சில ஒளிக் கீற்றுகளைக் காண முடிந்தது. - - 1908 ஆம் ஆண்டில், பள்ளிக்குப் போன பிள்ளைகளைப் பற்றிய தகவல்களை அலசிப் பார்த்த லெனின், மொத்த மக்களில், பள்ளி வயதுடையவர்கள், நூற்றுக்கு இருபத்தி ரெண்டு விழுக்காட்டில் உள்ளார்கள். பள்ளிக்குச் செல் வோரோ. நூற்றுக்கு 4.7 ஆக உள்ளார்கள். அதாவது, படிக்க வேண்டியவர்களில் ஐந்துக்கு ஒருவரே படிக்கிருர்; மற்ற நால்வருக்கு பொதுக் கல்வி கிட்டவில்லை' என்று கோடிட்டுக் காட்டினர். - பரவலான மக்கள் எழுத்தறியாமையைப் பற்றி, லெனினின் நுண்ணிய மனம் கொ திப்படைந்தது. தனக்கே உரிய, கன்னத்தில் அறைந்தார் போன்ற, நடையில், வேதனையோடு, 'பொது மக்களுடைய கல்வியையும் அறிவையும் ஞானத்தையும் இந்த அளவுக்கு பறித்துக்கொண்ட காட்டு மிராண்டி நாடு, வேறெதுவும் இல்லை-ஐரோப்பாவில் அத்தகைய நாடே இல்லை. இரஷ்ஷியாவே விதிவிலக்கு என்று லெனின் எழுதினர். கல்விக் கண் பெற்றுவிட்ட பொது மக்கள் அடிமைத் தனத்தை எதிர்த்துப் போராடுவார்கள் என்று அஞ்சிய ஜார் ஆட்சி மக்களை அறியாமையில் ஆழ்த்தி வைத்திருந்தது. ஜார் ஆட்சியின் போது, ஆண்டுக்கு, ஆளுக்கு, 80 கோபெக்கு 13