பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களே-ரூபிளில் ஐந்தில் நான்கு பங்கே-அவ்வளவு சொற்ப மாகவே-கல்விக்குச் செலவிடப்பட்டது. லெனினுடைய சிந்தனை இதற்கு நேர்மாருக இருந் கது. சோவியத் ஒன்றியத்தில், சமதர்மத்தை உருவாக் கும் பெருந் திட்டத்தின் முக்கிய கூருக, கலாசாரப் புரட்சியை வெற்றி பெறச் செய்ய் வேண்டுமென்று, லெனின் கருதினர். இதோ லெனினின் கூற்று! மகத்தான புரட்சி நடக்க வேண்டும். மக்கள் அனைவருமே, கலாசார வளர்ச்சிப் பருவத்தைக் கடக்க வேண்டும். ' பொது மக்களுடைய கலாசார நிலையை உயர்த்தும் முயற்சியும், நாட்டின் பொருளாதாரத்தை வளர்க்கும் பணியும் இணைந்தவை என்பது லெனினின் முடிவு. பொது மக்கள் எழுத்தறிவு பெறுதல், நாட்டின் பொருளியல் வளர்ச்சியிலிருந்து பிரிக்க முடியாத திட்டமாகும் என்பது இவருடைய கருத்து. பொது மக்களிட்ம் உள்ள கல்லாமையை வேரோடு கெல்லி எறியாமல், அரசியல் சிக்கல்களையோ பொருளியல் இக்கல்களையோ தீர்த்து வைக்க முடியாது' என்று லெனின் அறிவுறுத்தினர். சோவியத் மக்களுக்குப் பகையானவற் றுள், எழுத்தறியாமை, மிக முக்கியமான ஒன்று என்று லெனின் குறிப்பிட்டார். பொது மக்களுக்கு உடனடியாகத் தேவையானவற்றை சட்ட முலமாக்கும், ஒவ்வொரு படித்தவரும் பல படிக் காதவர்களுக்கு எழுத்தறிவு ஊட்டும்படி கட்டாயப்படுத்தும் நடவடிக்கைகளை எடுப்பது முக்கியம் என்று அக்டோபர் புரட்சியின் தலைவரான மாமேதை லெனின் வலியுறுத்தினர். எழுதப் படிக்கத் தெரிந்தவர்களை அணி திரட்டி, கல்லாமை யின் மேல் போர் தொடுக்கும் சாதாரண - ஆளுல் அவசர மான - செயலில் முனைய வேண்டும். இச் சிறு விஷயத்தி லேயே, புரட்சியின் முக்கிய வேலை அடங்கியுள்ளது என்பது லெனினுடைய முடிவு . 14