பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்லாமை நிறைந்த நாட்டில் பொது உடைமைச் சமுதாயத்தை அமைக்க முடியாது என்பதை லெனின் தெளிவாக எடுத்துரைத்தார். பொது மக்கள் . ஒவ்வொன் றையும் தெரிந்துகொண்டு, ஒவ்வொன்றையும் மதிப்பிட்டு, முடிவுகளை அவர்களே அறிவு பூர்வமாக எடுக்கும்போதே, அரசு வலிமையுடையதாக இருக்கும் என்பது லெனினுடைய கருத்து. எனவே, இளம் சோவியத் ஆட்சி, முதல் முதல் ஆற்றிய செயல்களில் ஒன்று கல்வி நிலையங்களின் கதவு களே. எல்லா மக்களுக்கும் திறந்து விட்டதாகும். புரட் சிக்குப் பின் உடனடியாக பழைய கல்வி அமைச்சகம் கலைக்கப்பட்டது. லெனின் ஆணப்படி, மக்கள் அறியாமை அமைச்சகத்திற்குப் பதில், பொதுக் கல்வி ஆஃணயகம் அமைக்கப்பட்டது. இது வெறும் பெயர் மாற்றமல்ல. நோக்கிலும் கொள்கையிலும் மாற்றத்தை இது காட்டிற்று. ஜார் ஆட்சிக்கால கல்வி அமைச்சகம், தொழிலாளி, குடியானவர் வீட்டுப் பிள்ளைகளுக்குக் கல்வியை கொடுப் பதைக் காட்டிலும், சுரண்டும் மக்களுக்குத் துணையாகும் வகையில் இளைஞர்களுக்கு பயிற்சி கொடுப்பதிலேயே நாட்டஞ் செலுத்திற்று. சுரண்டும் வர்க்கங்களுக்கு நல்ல ஊழியர்களாக இருந்து, அவர்களுடைய அமைதிக்கும் ஒய்வுக்கும் கேடு விளைவிக்காது, இலாபம் தேடித் தருவதற் காக, அக்கால ஏழைக் குழந்தைகள் பயிற்சி பெற்றன. சோவியத் கல்வியின் நோக்கம் இதற்கு நேர் மாரு colf. சோவியத் குடி மக்கள் எல்லோருக்கும்-சிறுவ ருக்கும் முதியவருக்கும் ஆணுக்கும் பெண்ணுக்கும் தொழி லாளிக்கும் குடியானவருக்கும்-அறிவைப் பெறவும் திறன் களை வளர்த்துக் கொள்ளவும் இக்கால உற்பத்தி முறை களில் பயிற்சி பெறவும் அதிக பட்ச வாய்ப்புகளைக் கொடுப் பதே, சோவியத் கல்வியின் நோக்கம். இளைஞர்களுடைய கல்வியின்பால் தனி ஆர்வமுடைய லெனின், சோவியத் பொதுக் கல்வி முறையை உருவாக் குவதில், நேரடியாக ஈடுபட்டார். 15