பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H is r ‘வாழ்ககைக்குப் புறம்பான அரசியலுக்கு வெளி: யான, கல்விக்கூடம் என்பது, பொய், மாயம்' என்று லெனின் தெளிவாகக் கூறினர். புதிய சமுதாயத்தில் பொது மக்கள் பெறும் கல் வியையும் வளர்ப்பையும் ஒட்டியே அவர்களுடைய மனப் பங்கும் போக்குகளும் அமையும். இதைக் காட்டிய லெனின், தொழில் பற்றிய கம்யூனிஸ்டுப் போக்கினை இளைஞர்களிடையே வளர்ப்பது தேவை என்றுரைத்தார். பழைய கல்வி முறையில், பள்ளிக்கூடங்கள் ஏட் டறிவைக் கொடுத்தன. அது, செயலோடு தொடர்பற்று இருந்தது. லெனின் இக்குறையைச் சுட்டிக் காட்டினர். பணிப் பயிற்சியைக் கொடாத-பள்ளி ஏன் பல்கலைக்கழக மும்-மதிப்பு. இழந்தது என்று லெனின் கூறினர். o, 'வாழ்க்கைப் பொங்கல்ோடு தொடர்பு இல்லாத, வகுப்பு அறைகளோடு முடங்கி விடும், பாடம், பயிற்சி, கல்வி ஆகியவற்றில் நம்பிக்கை கொள்ள முடியாது’’’ என்பது லெனினுடைய கூற்ருகும். * இதனுல்தான், சோவியத் கல்வி நிலையங்கள், வாழ்க் கைச் சிக்கல்களை சமாளிக்க மாளுக்கர்களை ஆயத்தஞ் செய்வதோடு, செயல் திறன்களையும் கற்றுக் கொடுக்கின் றன; சமுதாயத்தின் முழு நலனுக்காகவும் பாடுபடும் ஆற்றலை மாளுக்கரிடையே வளர்க்கின்றன. * +. எதிர்கால நுட்பத் தொழில் வல்லாரை ஆயத்தஞ் செய்வதோடு புதிய சோஷலிச சமுதாயத்தின் எதிர்கால மனிதனை உருவாக்குவதும் சோவியத் கல்வி நிலையங்களின் நோக்கமாகும். எனவே, காலத்திற்கு முந்தி, தனிப் பயிற்சி கொடுக்கக் கூடாதென்று லெனின் எச்சரித்தார். எல்லாத் தொழிற் பள்ளிகளிலும் தொழில் நுட்பம், அர வியல் பாட்ங்களுக்கு நேர்ம் ஒதுக்குவதோடு பொதுப் பாடங்களுக்கும் முன்பிருந்ததை விட அதிக நேரம் ஒதுக் கும்படி லெனின் ஆலோசனை கூறினர். பூர்ஷாவா வர்க்கத்தின் கலாசாரச் செல்வத்தை முழுமையாக ஒதுக்கிவிட வேண்டுமா? வேண்டாமென் 16