பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பறவைப் பார்வை பொதுக் கல்வியின் நிலை, சமுதாயத்தின் பொதுக் கலாசார நிலையை முடிவு செய்கிறது. பள்ளிக்கூடங்களின் எண்ணிக்கை, தரம், சாதாரண மக்களுக்கு அவை எட்டும் தன்மை, மாளுக்கருடைய சமுதாய நிலை, பாட திட்டத் தின் குறிக்கோள், உள்ளடக்கம் ஆகியவை பொதுக் கல்வி யின் நிலையை எடுத்துக்காட்டும். எல்லாப் பிள்ளைகளையும் சேர்ப்பதற்குப் போதுமான எண்ணிக்கையில், ஜார் ஆண்ட இரஷ்ஷியாவில், கல்விக் கூடங்கள் இருந்தனவா? இல்லை. அன்றிருந்த பள்ளிகள் போதா. ஏதாவது ஒருவகைக் கல்வி, அன்றைய இரஷ்ஷி யாவில் வாழ்ந்த எல்லா தேசிய இனங்களுக்கும் எட்டிற்ரு? இல்லை யென்பதே பதில். ஜார் காலத்து மாளுக்கர்களில் மிகப் பெரும்பாலானவர்கள், பூர்ஷாவா குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இரஷ்ஷிய சமுதாயத்தின் ஏழைக் குடும்பங் களைச் சேர்ந்தவர்களைக் காண்பது அருமை. நாட்டிலுள்ள அனைவருக்கும் தொடக்கக் கல்வி என்பதில், ஜார் ஆண்ட இரஷ்ஷியாவிற்கு நம்பிக்கை இல்லை. எல்லா ஊர்களிலும் பொதுப் பள்ளிகளைத் திறக் கவும் அது நடவடிக்கை எடுக்கவில்லை. பல்லாயிரக்கணக் கான சிற்றுார்கள் தொடக்கப் பள்ளியும் இல்லாமல் அவதிப் பட்டன. அப்போதிருந்த பள்ளிகளில் அநேகம், தனியா ரால் நடத்தப்பட்டன. அவை வாங்கிய சம்பளமோ, ஏழைகள் கட்டமுடியாத அளவு உயர்ந்தவை; எனவே, அவை ஏழைப் பிள்ளைகளுக்கு எட்டவில்லை. மக்களுடைய, நெடுங்கால, கல்விப் பிற்போக்கு நிலை யைப் புறங்காண்பதற்கான சூழ்நிலையை 1917 ஆம் ஆண் டின், சோஷலிசப் புரட்சியின் வெற்றி உருவாக்கியது. HR