பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அாடுபடும் பாட்டாளிகளையும் இளைய தலைமுறையினர் அனைவரையும் கல்விபெறச் செய்யும் நோக்கோடு, மிகக் குறுகிய காலத்தில், கடலென விரிந்த பணி செய்து முடிக் கப்பட்டது. அக்டோபர் புரட்சி நடந்த சூட்டிலேயே, கல்லாமை யையும் கலையின்மையையும் எதிர்த்துக் கடும் போர் நடத் துமாறு லெனின் கட்டளையிட்டார். சமதர்மத்தின் பொரு ளியல், கலேயியல், அடிப்படைகளை. பதக்கத்தின் இரு பக் கங்களாகவே லெனின் கருதினர். சமதர்ம நாடு ஒன்று தோன்றுவதை, அப்போதே, உலகம் முதன் முதல் கண்டது. புதிய சமதர்ம சமுதா யத்தைக் கட்டியமைக்கும் வரலாற்றுப் பொறுப்பு, இயே சோவியத் ஆட்சியின் தோள்களில் வீழ்ந்தது. உறுப்பினர் கள். பொது அறிவும் தொழில் நுட்ப அறிவும் பெருவிட் டால், புதிய சமதர்ம சமுதாயத்தை உருவாக்க இயலாது. புதிய சமுதாயத்தின் பணிகள் எவ்வளவு விக்கலா கின்றனவோ, அவ்வளவிற்கு, உழைக்கும் மக்களின் புரிந்து கொள்ளும் ஆற்றலும் சுய சிந்தனையும் வளர வேண்டும். இது கல்வி, மேலும் கல்வி, எல்லார்க்கும் முக்கியமானது. மதிப்பானது என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறது. பின்வரும் அதிகாரமொன்றில், நாம் விரிவாகக் கானப் போவதைப் போல், முதியோர் எழுத்தறிவைப் பாப் நாடு கருவிய பேரியக்கம் ஒன்று வெற்றிகரமாக ந த்தப்பட் து. அதே நேரத்தில், எல்லா தேசிய இனப் பிள் ஃகளுக்கும் கல்வி வாய்ப்புகள் மும்முரமாகப் பெருக் கப் ட் ண் - ள்நாட்டுப் போர் நடந்த ஆண்டுகள் கடின பால காலம். பொருளாதாரச் சீரமைப்பு, சமதர்மத் தொழில் மாற்றம், சிக்கனத்தின் இன்றியமையாமை ஆகிய வற்றிற்கு இடையிலும், கடைக் கோடிகளிலும் பள்ளிகள் திறக்கப்பட்டன. சிறுவர் சிறுமியர் அவற்றை மொய்த்துச் கொண்டனர். எல்லார்க்கும் தொடக்கக் கல்வி கொடுக்க வும் உயர் நிலைப் பள்ளிக் கல்வியை வளர்க்கவும் ஆன சூழ் நிலை இவ்விதம் உருவாக்கப்பட்டது. -1A)