பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அக்டோபர் புரட்சியின் போது, எண்ணற்ற ஊர் களுக்குத் தொடக்கப் பள்ளியும் இல்லை. பாட நூல்: களுக்குப் பஞ்சம்: காகிதம், பென்சில், பேணு போன்ற எழுது பொருள்களும் கிடைப்பது அரிது. பாட துணைக் கருவிகளுக்கும் பஞ்சம். எல்லாப் பிள்ளைகளுக்கும் சொல். லிக் கொடுப்பதற்குப் போதுமான ஆசிரியர்களும் இல்லை. இரஷ்ஷியர் அல்லாத பிற இனத்து ஆசிரியர்கள் கிடைப் பது மேலும் அருமை. பேச்சு மொழிகளாகவே இருந்த பல மொழிகளில் கல்விக் கருவிகள் கிடைக்கவில்லை. எனவே, அவ்வினங்களின் கல்வி வளர்ச்சி எதிர் நீச்சலாக இருந்தது. இத்தனைத் தடைகளையும் தாண்டி, இளம் சோவி யத் அரசு, முதியோர் கல்லாமைக்கு எதிராக, நாடு தழு விய இயக்கமொன்றை உறுதியாகத் தொடங்கிற்று. கிடைத்த ஒவ்வொரு சாதனத்தையும் இம் முயற்சியில் ஈடுபடுத்தியது. சோவியத் நாட்டில் வாழ்ந்த எல்லா மக்களுக்கும் கல்வியுரிமை உண்டு என்று அறிவித்ததோடு, அது, உடனடியாக, உருவாகப் போதிய நடவடிக்கைகளைத் தீவிரமாக எடுத்தது. 1919ஆம் ஆண்டு 26ஆம் நாள், மக்கள் ஆணைக் குழு (அமைச்சர் அவை) லெனினுடைய ஆலோசனையின் பேரில், கல்லாமையைக் கெல்லி எறிவதற்கான ஆணை யொன்றை பிறப்பித்தது. இது, நாட்டில் எட்டு வயது முதல் ஐம்பது வயது வரை உள்ள அனைவரும் தத்தம் தாய் மொழியிலோ இரஷ்ஷிய மொழியிலோ எழுதப் படிக்கக் கற்றுக்கொள்ள வேண்டுமென்று கட்டளையிட் டது. எம்மொழியில் படிப்பது என்பதை மக்கள் விருப் பத்திற்கு விட்டு விட்டது. ஏற்கனவே உள்ள பள்ளிகளில் "முதியோர் எழுத்தறிவுப் பள்ளி'களைத் தொடங்கிஞர்கள். எழுத்தறிவு மையங்கள் எல்லாப் பக்கங்களிலும் முளைத் தன. கல்லாமையைப் போக்கும் எழுத்தறிவுப் பள்ளி களும் மையங்களும், ஆலைகளிலும் தொழிற் கூடங்களிலும் இராணுவக் கூடங்களிலும் படிப்பகங்களிலும் தோன்றின. - - 28