பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறுவர்களும் முதியவர்களும் ஒரே பெஞ்சில் அமர்ந்து தொடங்கினர்கள். நாடு முழுவதுமே பெரிய :பள்ளியாகி விட்டது. எழுத்தறியாமையை வெல்லும் முயற்சிகளை லெனின் io 1 - - o s - s 4. # s 'கூர்ந்து கவண்ணித்து வந்தார். மகததான அக்டோபர் புரட்சிக்கு அடுத்த நாளே, புதிதாக அமைக்கப்பட்ட, மக்கள் கல்வி ஆணையகத்தின் புதிய ஆணேயர், ஏ.வி. லுனு. சார்ஸ்கியிடம் இரஷ்ஷியாவில் எழுத்தறியாமையை ஒழித் தாக வேண்டுமென்று தலைவர் லெனின் கட்டளையிட்டார். மக்கள் கல்வி ஆனேயகம் அனுப்பிய முதல் சுற்ற றிக்கை, எழுத்தறியாமையை ஒழிப்பதில் அறிவாளிகள் அனைவரும் கலந்து கொள்ளும்படி அழைத்தது. கல்லாமையும் அறியாமையும் ஆட்சி செய்யும் இந்நாட்டில், கல்வித் துறையில் இயங்கும் எல்லா ஜன. நாயக அமைப்புகளும், இவ்விருளைப் போக்கப் போராடு வதையே தங்கள் முதல் குறிக்கோளாகக் கருத வேண்டும். இக்காலத்திற்குப் பொருத்தமான பள்ளிகளை நாடு முழு வதும் திறப்பதன் மூலமும் கட்டாய இலவசக் கல்வியைக் கொண்டு வருவதன் மூலமும் இக் குறிக்கோளே, முடிந்த அளவு குறைந்த காலத்தில், அடைய வேண்டும். சிறு வர்களுக்கும், இளைஞர்களுக்கும் பள்ளிகளைத் திறப்பதோடு, கல்லாடைக்கும் அறியாமைக்கும் எதிரான போராட்டம் முடிந்து விடாது. எழுதவும் படிக்கவும் தெரியாது என் னும் இழிவிலிருந்து, முதியோரும் விடுபட விரும்புவர். பொதுக் கல்வித் திட்டத்தில், முதியோர் பள்ளிகளுக்கு முக்கிய இடம் கொடுக்க வேண்டும்.' முதியோர் எழுத்தறிவுப் பணிக்கு வாருங்கள் என் றழைத்த போது, ஏராளமான தொண்டர்கள் முன் வந் தார்கள். எழுத்தறிவிக்கும் பேரணியில், பல்லாயிரக் கணக்கான ஆசிரியர்கள், மாணக்கர்கள், அலுவலர்கள் ஆகியோர் விருப்பத்தோடு சேர்ந்தார்கள். நாடு தழுவிய எழுத்தறிவுப் பெரும் பணியில் இளம் கம்யூனிஸ்டுக் கழ கம். தனி அக்கறையும் முயற்சியும் செலுத்திற்று. அவர் 29