பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கள். கல்லாமை ஒழிப்பிற்கு மக்களைத் திரட்டிஞர்கள். பள்ளிகளைக் கட்டித் தந்து உதவினர்கள்; முதியோர் பள்ளி வில் ஆசிரியர் தொண்டும் ஆற்றிஞர்க ள். எங்கெங்கு முடியுமோ, அங்கெல்லாம். எழுத்தறிவு வகுப்புகள் தோன்றின. மூன்று முதல் முப்பது மாளுக் கர்கள் வரை அவ்வகுப்புகளில் இருந்தார்கள். ஒரே முதிய வரே வந்த வகுப்புகளும் இருந்தன. அவையும் தொடர்ந்து செயல்பட்டன. எழுத்தறியாமை ஒழிப்புச் சங்கம்’ என்னும் பெயரில் * s - * + - = ன்ை ஒரு சங்கம் 1923இல் நிறுவப்பட்டது. சோவியத் g றியத்தின் முதல் தலைவராக விளங்கிய, மிக்கையில் கலினின், அதன் தலைவராகத் தொண்டாற்றினர். அவ ருடைய முன்முயற்சியால், நாடு தழுவிய இவ்வியக்கம் மேலும் முடுக்கி விடப்பட்டது. அறிவுத் தாகம் எல்லா ரிடமும் வளர்க்கப்பட்டது. பாட்டாளிகள் விவசாயிகள் இடையே எண்னையும் எழுத்தையும் கற்றுக் கொள்ளும் அவா துண்டப்பட்டது. இந்த அவா, பெண்களிடமும் எழுந்தது. == புதிய வாழ்வை உருவாக்குவதில் பெண்களும் சுறு சுறுப்பான பங்கு கொள்ளச் செய்வதற்கு முக்கிய வழி, பெண்களுக்கு எழுத்தறிவு அளிப்பதே என்று உணர்ந்த லெனின், பெண்கள் எழுத்தறிவு பெறுவதற்கு மிக முக் கியத்துவம் அளித்தார். இப்பணி அவசரமானது, நிறை பலன் உடையது என்பதை அறிவுறுத்த, எள் வாய்ப் பையும் லெனின் தவற விடவில்லை. -- கல்விக்காக நிதி திரட்டும் பரவலான, பெரிய இயக் ம்ை செயல்பட்டது. நாடு முழுவதிலும் விடுமுறை நாட் களில் ஊதியம் பெருமல், பொதுப் பணிகளைச் செய்யும் முறையும் பள்ளிக்கு உதவும் வாரங்களும் நடத்தப்பட்டன. தொழிற் சாலைகளும் இயந்திரக்கூடங்களும் பிற அமைப் புகளும் பொதுக் கல்விக் கூடங்களுக்கும் முதியோர் எழுத் தறிவுப் பள்ளிகளுக்கும் ஆதரவு கொடுக்க முன்வந்தன. ՀՅ