பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடுமையான வர்க்கப் போராட்டம் நடந்து கொண் டிருந்த நிலையில்தான், எல்லாப் பக்கங்களிலும் எழுத் தறியாமை ஒழிப்புப் பணி நடந்தது. பொது மக்களி டை யே அரசியல் அறிவும் கலையொளியும் பரவி விடாத படி தடுக்க, சோவியத்திற்கு எதிர் சக்திகள்-குறிப்பாக நாட்டுப்புறங்களில்-எல்லா முயற்சிகளையும் செய்து பார்த்தன. தொடக்கத்திலிருந்தே, முத்திய அனைத்துக் கல்வி முயற்சிகளைக் காட்டிலும் பெருமளவு விரிந்த அடிப்படை யில், சோஷலிசக் கலைப் புரட்சி அமைந்தது. முன்னறி யாத அளவு பெரிய, மக்கள் இயக்கமாக, இது இருந்தது. மேலிடத்திலிருந்து வீழ்ந்த கல்விப் பிச்சையை, கை யேந்தி ஏற்றுக் கொள்பவர்களாக இருப்பதற்குப் பதில், புதிய பண்பாட்டிற்கு வாதிடுபவர்களாகவும் அதை அமைப் பவர்களாகவும் தொழிலாளிகளும் குடியானவர்களும் செயல் பட்டார்கள். பல்வேறு நடவடிக்கைகளின் விளைவாக, 1925-26 ஆம் ஆண்டிற்குள் 30 இலட்சம் முதியோர்கள் எழுதவும் படிக்கவும் கற்றுக் கொள்வதில் ஈடுபட்டிருந்தார்கள். அவர் களில் நாற்றுக்குத் தொண்ணுாறு பேர்கள் நாட்டுப்புற மக்கள் ஆவார்கள். காலஞ் செல்லச் செல்ல, முதியோர் எழுத்தறிவு இயக்கம் மேலும் வீறு கொண்டது. மத்திய ஆசியக் குடியரக களில் வாழ்ந்த மாதர்கள், கோஷா முறையைப் பின்பற்றினர்கள். அவர்கள் ஆண் கள் கடும் முதியோர் எழுத்தறிவு வகுப்புகளுக்குச் செல்ல மறுத்தார்கள். அம் மனப்போக்கு மாறும் வரை. எழுத் தறிவு ஊட்டுவதைத் தள்ளிப் போடவில்லை. எழுத்தறிவு வகுப்புகளை நாடி, பெண்கள் போகாத இடங்களில், பெண் களை நாடி அவ்வகுப்புகள் சென்றன. அக்கம் பக்கத்து மாதர்களின் நம்பிக்கைக்கு உரியவர்களின் வீடுகளில் எழுத் தறிவு மையங்கள் தோன்றின. மாதர்களுக்காக குழந்தை வளர்ப்பு, மனையியல் திறன் பற்றிய பாடங்களைக் கொண்ட தனிவகுப்புகள் நடந்தன. - 31