பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோவியத் ஒன்றியத்தின் மகத்தான சாதன்ைகள் பலவாகும். சோவியத் மக்களிடையே, கல்வியின்பால், மேலும் மேலும் கற்பதன்பால், ஏற்பட்டிருக்கும் நாடு தழுவிய ஆ | வ ம் , இச் சாதனைகளில் சிறந்ததாகும். சோவியத் ஒன்றியத்தில் எங்கு சென்ருலும் இத்துடிப்பைக் காணலாம். எவ்வித பாரபட்சமும் காட்டாமல், எல்லோர்க்கும் கல்வி வாய்ப்புகள் வெள்ளமெனப் பெருகச் செய்துள்ளது, சோவியத் ஆட்சி. இந்தக் குடும்பத்தில் பிறந்து விட் டோம். இந்தப் பட்டிக்காட்டில் பிறந்து விட்டோமென் பது போன்ற பிறப்பு விபத்துகள், எவருக்கும் தடை களாக நிற்கவில்லை. அந்த மாபெரும் நாட்டில் வாழும் எல்லா தேசிய இனங்களுக்கும் கல்வி வெள்ளம் சமமாகப் பாய்கிறது. ஆணும் பெண்ணும் ஒன்முக இருந்து ட டிக் கும் முறை சோவியத் கல்வியின் உறுதியான அடிப்படை யாகும். இதல்ை, கல்வியில், ஆண் பெண் சமத்துவம் என்பது சட்டத்தில் இடம் பெற்றிருப்பதைப் போல், வாழ்க்கையிலும் செயல்படுகிறது. 'தாய்மொழி வழி யாகக் கல்வி' என்பது சோவியத் நாட்டின் அடிப்படை உரிமைகளில் ஒன்ருக இருக்கிறது. சோவியத் ஒன்றியத் தில் வாழும் பல்வேறு தேசிய இனங்கள் இவ்வுரிமையைப் பயன்படுத்துகின்றன. எல்லோர்க்கும் கல்வி என்பது, வெறும் முழக்கமல்ல; இன்றைய சோவியத் சமுதாயம் பெற்றுள்ள ஒளிவீசும் சிறப்பாகும். பல பிற நாடுகளில், எல்லோர்க்கும் கல்வி: என்பதற்குக் கொண்டுள்ள பொருளைக் காட்டிலும் விசிந்த பொருளில் சோவியத் நாட்டில், இது செயல் படுகிறது. ஐந்து முதல் பத்து வயது வரை, ஆறு முதல் பதி ன்ைகு வயது வரை, என்னும் குறப்பிட்ட வயதுக்குள். அடங்கியவர்களை மட்டுமே கணக்கில் கொண்டு, எல் லோர்க்கும் கல்வி' என்று பல நாடுகள் திட்டமிடுகின்றன. அப்பிரிவுகளுக்கு அப்பாற்பட்டவர்களை ஒதுக்கி விட்டே பேசுவது, அந்நாடுகளின் பழக்கம்: சோவியத் ந்ாட்டிலோ, எல்லோர்க்கும்’ என்னும் சொல்லில், சிசு, குழத்தை, 7