பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளைஞன், வாலிபன், முதிர்ந்தவர் ஆகிய அனைவரும் அடங்குகின்ருர்கள். ஆண்களும் பெண்களும் அச்சொல் லால் குறிக்கப்படுகிரு.ர்கள். - மாமேதை லெனினுடைய தலைமையில் வெற்றி பெற்ற, 1917 ஆம் ஆண்டின் அக்டோபர் புரட்சி, பொரு ளியல் - அரசியல் துறைகளில் மட்டுமா, பழைய முறை யினே அறுத்து விட்டது? அதற்கு மேலும் சாதித்தது. சமுதாய - கலாசாரத் துறைகளிலும் பழமையிலிருந்து ... - முழுமையாக விடுவித்தது. அரசியல் துறையில், ஜார் மன்னனின் கொடுங்கோல் ஆடசயை ஒழித்துக் கட்டியது; பாட்டாளிகளின் சர்வாதி காரத்தைக் கொண்டு வந்தது. பொருளியல் துறையில் மனிதன மனிதன் சுரண்டும், பழைய, கொடிய முறைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. உற்பத்தி, வாணிக, சாதனங் கள் அனைத்தையும் நாட்டுடைமையாக்கும் புதிய பொரு ளியல் முறையை வெற்றிபெறச் செய்தது. சோவியத் சமுதாயம் முடுக்கிவிட்ட, சமுதாய-கலாசாரப் புரட்சியும் இத்தகைய நிலையான, தலைகீழான மாற்றத்தை உண் டாக்கி உள்ளது. ஜார் ஆட்சிக் காலத்தில் வெறும் எழுத் தறின்வப் பற்றிக்கூட கனவு காண முடியாதிருந்த கோடிக் கனக்கான ஆண்களும் பெண்களும், பையன்களும் சிறுமி களும், தங்கள் வீடு தேடி வந்து, கல்வி வாய்ப்புகள் கத வைத் தட்டுவதை முதன் முறையாகக் கண்டார்கள். பொதுக் கல்வித்துறையில், சோவியத் நாட்டின் சாதனே, அளவிலும் தரத் தி லும் உயர்ந்தது: அளவு உயர்ந்தது. -

  • *

முன்னறியாத பதினைந்து வயதுக்குட்பட்ட எல்லாப் பையன்களையும் சிறுமிகளையும் பள்ளிக்குக் கொண்டு வருவதில் சோவியத் ஒன்றியம் .ெ வ ற் றி பெற்றுள்ளது. பத்தாம் வகுப்பு முடிய் எல்லோர்க்கும் கட்டாயக் கல்வி என்னும் கொள் கையைத் திட்ட்மாக்கி, நிறைவேற்றுவதில், விரைந்து முன்னேறி வருகிறது. உலகத்தின் முதல் சமதர்ம 'நாடு f சோவியத் நாடாகும். எல்லார்க்கும் எல்லா நிலைக் கல்வி யையும் இலவசமாக்கிய முதல்நாடு, சோவியத் ஒன்றியமே. 8