பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடியரசிற்குக் குடியரசு, வாய்ச் சொல் தேர்வுப் பாடங்களிலோ எழுத்துத் தேர்வுப் பாடங்களிலோ சிறு மாறுபாடுகள் இருக்கலாம். ஆளுல் மொத்தத்தில், ஒரே சாயலைக் காணலாம். 'டிக்கெட்டுகளைத் தயாரிக்கும் முறையினுல் கேள்வித்தாள் தயாரிப்போரின் விருப்பு வெறுப்புகள் நீக்கப்படுவதாக, சோவியத் கல்வியாளர்கள் கருதுகிரு.ர்கள். மாணவனுடைய பாட அறிவு மேலெ ழுந்தலாரி உள்ளதா அல்லது ஆழமாக உள்ளதா என் பதைத் தேர்வாளர்கள் துணைக் கேள்விகளின் வழியாகக் கண்டு கொள்ள வாய்ப்பிருப்பதால், வாய் சொல்லாகத் தேர்வு நடத்துவது இருப்தியானது என்று அவர்கள் கருதுகிருர்கள். சோவியத் ஒன்றியத்தில், உயர்நிலைப் பள்ளிகளிலும் பிற கல்வி நிலையங்களிலும் நடத்தும் அரசு தேர்வுகளின் ஒரே நோக்கம், மானுக்கர்களின் சாதனைகளை, எவ்வளவு கற்றுக் கொண்டார்கள். எவ்வளவு செரித்துக் கொண் டார்கள் என்பதை மதிப்பிடுவதாகும் என்பதை நாம் தெளிவாக மனதிற் கொள்ள வேண்டும். so