பக்கம்:சோவியத் கல்வி முறை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளைஞர்களுக்குக் கிடைப்பவை பாட நூல்கள் மட்டு மல்ல. சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஆன இலக் கியம் பற்றி, அவற்றின் கலை, சமுதாய இயல், ஒழுக்க இயல் சிறப்பு பற்றி சோவியத் ஒன்றியம் பெருமைப்படு வதற்கு நியாயம் இருக்கிறது. சோஷலிசக் கலை வளர்ச்சி வரலாற்றின் ஒளிவிடும் பகுதி, குழந்தைகளுக்காக ஏராள மான நூல்களை வெளியிடுதல் ஆகும். சோவியத் குழந்தை இலக்கியம், உண்மையிலேயே, பல தேசிய இலக்கியங்கள் கொண்டதாகும். அநேக தேசிய இனங்களேச் சேர்ந்த எழுத்தாளர்கள், படம் வரைவோர்கள். நூல் அமைப் போர்கள், அறிஞர்கள், கல்வியாளர்கள் ஆகியோர் குழந்தை இலக்கியத்தை உருவாக்கி வருகின்றனர். சோவி யத் குழந்தை இலக்கியத்தில், தேசிய உணர்வு உண்மையில் வீசுகிறது. இது குடிமை உணர்வை வளர்க்கிறது: இது வாழ்க்கை உண்மைகளைச் சார்ந்துள்ளது: மேலும் மனித பாசத்தை வளர்க்கிறது. சிறுவர் இலக்கியத்தில் சிறப்பாக ஈடுபட்டுள்ள, 100-க்கு மேற்பட்ட வெளியீட்டு நிறுவனங்கள். ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 2,000 தலைப்புகளில் சிறுவர் களுக்கான நூல்களே வெளியிடுகின்றன. இவற்றின் மொத்தப் பிரதிகள் 20 கோடிகள் ஆகின்றன. சிறுவர் இலக்கியத்தில், பண்டையப் பெருங் காப்பியங்கள். நாட்டு மக்கள் இலக்கியம், செய்யுட்கள், சிறு கதைகள். வன தேவதைக் கதைகள் ஆகியவை அடங்கும். பள்ளிக்கு முந்திய வயதுக் குழந்தைகளுக்கும் தொடக்கப் பள்ளிக் குழந்தைகளுக்கும் ஆன நூல்களே சோவியத் எழுத்தாளர் களும் பிற நாட்டு எழுத்தாளர்களும் எழுதியிருக்கிருர் கள். சோவியத் சிறுவர் இலக்கியம் பல்பொருள் பற் றியது. பல்சுவையுடையது ஆகும். சோவியத் சிறுவர் இலக்கியத்தில் புதினங்கள், செய்யுட் திரட்டுகள் பலரும் விரும்பும் விஞ்ஞானம், விஞ்ஞானக் கதைகள் வரலாறு, புகழ் பெற்றவர்கள் வாழ்க்கை வர லாறுகள், மக்கள் விரும்பும் வரிசைகள் ஆகியவற்றைக் காணலாம். மிகப் பெரிய, சிறுவர் இலக்கியக் கருவூலத்தின் குறிக்கோள் 93