பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

கவனித்துக் கொள்கிருர் ஏறத்தாழ பதினேந்து ஆண்டு களாக மாஸ்கோவில் பணிபுரிகிருர், o இரு இந்திய நண்பர்களும், வ்லாடிமீருக்குச் சற்று விடுதலை கொடுத்தார்கள். - -

அன்று மாலே காய்ச்சல் இருந்த நிலையில், அடுத்த நாள், கொட்டும் பனியில் இருந்து கொண்டு, செஞ்: சதுக்க அணிவகுப்பைப் பார்க்க முயல்வது நல்ல தல்ல வென்று, மூவரும் கூறினர்கள். அவர்கள் சொல்லை மீறி வெளியே செல்ல முயன்ருல், நோய் அதிகமாகி விட்டால், என்ன செய்வது என்ற கவலை எனக்கு. எனவே, ஏமாற்றத்தை வெளிக்குக் காட்டாமல், அணிவகுப்பைப் பார்க்க செஞ்சதுக்கத்திற்குச் செல்லாமல் இருக்க உடன்பட்டேன்.

"அங்கே போகாவிட்டால் என்ன? இங்கே படுக் கையில் படுத்தபடியே அணிவகுப்புக் காட்சிகள் அனைத்தையும் காணலாம். எதிரேயுள்ள தொலைக் காட்சியை மட்டும், மறக்காமல் நேரத்தில் இயக்கி விடுங்கள்' என்று ஆறுதல் கூறினர், வ்லாடிமீர்.

தொலைக்காட்சிப் பெட்டியை உரிய நிலைக்குக் கொண்டு வந்து வைத்து விட்டு, 'நாளே காலே இப் பொத்தானே மட்டும் அழுத்தி விடுங்கள். இங்கிருந்த படியே ஒன்று விடாமல் பார்த்து மகிழலாம் என்று மீண்டும் கூறி விட்டுச் சென்ருர் சோவியத் நண்பர்.

இந்திய நண்பர்களும் சிறிது நேரம் இருந்து விட்டு, விடை பெற்றுக் கொண்டார்கள். நான் நன்ருகத் துரங்கினேன். ஆயினும் காய்ச்சல் தணிந்ததாகத் தெரிய வில்லை.

பொழுது விடிந்தது. பத்தியச் சிற்றுண்டி உண்டேன். தொலைக்காட்சிப் பொறியை இயக்கினேன்.