பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

129

அதோ, செஞ்சதுக்கம். அதன் பின்னல், ஒளிவிடும் ஒரெம்ளின்". செஞ்சதுக்கத்தில் அக்டோபர் புரட்சியின் ஐம்பத்து நான்காம் ஆண்டு விழா கொண்டாடப் இடுகிறது. சோவியத் காட்டின் தலைவர், பிரதமர் மற்ற அமைச்சர்கள், பிற தலைவர்கள். பற்பல நாட்டுக் குழுக்கள் குழுமியுள்ளனர். பெய்யும் பனியையும் பொருட் படுத்தாது தலையில் காதுகளேயும் மூடும் பெருங் குல்லாய்களையும் உடலில் நீண்ட கம்பளிக் கோட்டு களையும் அணிந்து கொண்டு, பெருமிதத்தோடு அணி வகுப்பைக் கவனிக்கிருர்கள்.

அணிவகுப்போ நீண்டது. அதோ படை வீரர்களின் பெருநடை போர்க் கருவிகளின் அணியைக் கண்டு வியப்பு: பெருத்த கை தட்டல். எத்தனை புத்தம் புதிய போர்க் கருவிகள் செல்கின்றன? கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளும் அணியில் சென்றன.

பின்னர், பொதுமக்களின் அணி. அதோ, மாஸ்கோ வாசிகள், தொழில் வீரர்கள். தங்கள் தங்கள் உச்ச சாதனைகளை அறிவிக்கும் அட்டைகளைத் தாங்கிக் கொண்டு, பெருநடை போடுவதைக் கண்டு, கூட்டத் தினர் பாராட்டுகின்றனர்.

இளைஞர் அணிகளைப் பாருங்கள். மாஸ்கோவில் படிக்கும் வெளிநாட்டு இளைஞர்களும், சோவியத் காட்டு வாலிபர்களும் பெண்களும் சேர்ந்து. செஞ்சதுக்கத்தில் பெருநடை போடுகிறதைப் பார்க்கிருேம்.

அதோ மேலே, மிகப் பெரிய பலூன். அதன் மேல் ஏதோ எழுதியிருக்கிருர்கள். என்ன அது?

'ஆதிக்கவர்க்கங்களுக்கு எதிரான அணியின் ஒற்று மைக்காக" என்று சொல்லுகிறது. உயரத்தில் பறக்கும்

பலூன்.