பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133

இடையில் மாத்திரைகள் இரண்டாயின.

சோதனைகளின் முடிவு, ஒவ்வொன்றும் சரியாக இருந்தன. குறையேதும் இல்லையென்று தெரிந்தது. அப்புறம் நவம்பர் பத்தாம் நாள் மாலை, மருத்துவ மனையை விட்டுச் செல்ல அனுமதி கிடைத்தது. வ்லாடிமீருக்கு அத் தகவல் சொல்லப்பட்டது. அவர், காரோடு வந்தார், என்னை ஒட்டலுக்கு அழைத்துச் சென்ருர். மருத்துவமனைக்குச் செல்லும்போதும் மருத்துவ மனேயிலிருந்து வெளியேறும்போதும், ஓயாமல் பனி பெய்து கொண்டிருந்தது.

இயற்கை, கடுஞ் சோதனைக்குள்ளாக்கிலுைம், சோவியத் மக்கள் அன்போடு இருந்தார்கள். மருத்துவ மனையில் விழிப்போடும், ஆர்வத்தோடும் கவனித்துக் கொண்டார்கள். -

மருத்துவமனையில் சேர்ந்ததும், நோயாளியின் உடைகளை, கழற்றி வாங்கிக்கொண்டு, மாற்று உடை களையும் சிலிப்பர்களையும் கொடுக்கிருர்கள். திரும்பும் போது, சொந்த உடையைக் கொடுத்து விடுகிருர்கள்.

பன்னிரண்டு மணி நேரத்தில் காய்ச்சலைக் குணப் படுத்திவிட்டு, மூன்று நாள் பொறுத்திருந்து பார்த்து விட்டு, என்னை வெளியே அனுப்பினர்களே! அதற்கு ஏதாவது செலவு உண்டா? இல்லே மருத்துவமனையில் இருந்ததற்கோ, மருத்துவர் கவனிப்பிற்கோ, மருந்துச் செலவுக்கோ யாரிடமும் கட்டணம் வாங்குவதில்லை. எல்லாம் இலவசம். பெரிய மனிதர்களுக்கு மட்டுமா? இல்லை. எல்லோருக்கும் இலவசம். உள்நாட்டுக்காரர் களுக்கும் இ ல வ ச ம். வெளிகாட்டிலிருந்து வந்து போவோருக்கும் இலவசம்.

மருத்துவ வசதி, போதிய அளவு இருக்கிறது. நகரங். களில் இருப்பதைப் போலவே, காட்டுப்புறங்களிலும்