பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135

வதற்கே. நான் கோய்வாய்ப்பட்டதால், மற்ற மூவரும் மாஸ்கோ நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, இக்கோ சோவியத் உடன்படிக்கையை ஆதரித்துப் பேசினர்கள்.

ச்ோவியத் கனரக அமைப்புகளின் அமைச்சகத்தைச் சேர்ந்தவர்கள் சோவியத்-இந்திய நட்புறவுத் திங்களேக் கொண்டாடினர்கள். அதில் சோவியத்தைச் சேர்ந்த பெரியவர்கள் பேசினர்கள். நம் இந்தியர்களும் பேசி ஞர்கள். அங் நாட்டில், அரசு அலுவலகங்களில், பிற நாட்டு நட்புறவுக் கழகங்கள் பணிபுரிகின்றன. இக் கொண்டாட்டம் ஆர்வத்தோடும் சிறப்போடும் இருந்த

آيا * தாம். நண்பர்கள் இதைப் பற்றி எனக்குத் தெரிவித்த போது, நல்ல வாய்ப்பை இழந்துவிட்டோமே என்று

ஏங்கினேன்.

மாஸ்கோவில் மற்ருேர் நிகழ்ச்சி, உடை தயாரிப் போர், கொண்டாடிய சோவியத் இந்திய நட்புறவு மாத மாகும். இக் கூட்டமும் உவகையோடும் சிறப்பாகவும் கடந்ததாக நண்பர்கள் மூலம் அறிந்தேன். மீண்டும் ஏக்கம். இரு சார்பிலும் உள்ள உவகையோடு ஆதரவுப் பேச்சுகள் இருந்தன.

என்னை விட்டுவிட்டு, இந்திய நண்பர்கள், 'பொருளா தார முன்னேற்றக் கண்காட்சி"க்கு சென்றிருந்தார்கள். அது பெரிய கண்காட்சி. நாள் முழுவதும் பார்த்தாலும், அத்தனேக் காட்சிகளேயும் காண முடியாது.

சோவியத் நாடும், அதில் அடங்கியுள்ள பதினேந்து குடியரசுகளும், வேளாண்மை, தொழில், கல்வி, கலே, ஆய்வு, மருத்துவ வசதி, உறையுள், ஆகிய பல்வேறு துறைகளிலும், பெற்று வந்துள்ள முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் விளக்கும் வகையில் அக் கண்காட்சி அமைந்துள்ளது.