பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137

இக் கூட்டத்திற்கு நானும் சென்றிருந்தேன். மேடை மீதமர்ந்து, அவையோர் முகபாவங்களைக் கண்டு ரசித்து, நானும் ஆர்வம் கொண்டேன்.

கூட்டத்திற்குப் பின் எங்களுக்கு தேனிர் விருந்து அளித்தார்கள். விருந்து நன்முக இருந்தது உள்ளன்பு கலந்ததாகவும் இருந்தது. இவற்றையெல்லாம் திறம்பட ஏற்பாடு செய்த, லுபோ முத்ரோவை எல்லோரும் பாராட்டிப் போற்றி விட்டு, விடுதிக்கு திரும்பிைேம்.

எங்கள் மாஸ்கோ நிகழ்ச்சியின் மு ற் பகு தி முடிவடைந்தது. அடுத்த நாள் நாங்கள் கால்வரும் இரு குழுக்களாகப் பிரிந்து, இரு வேறு பக்கம் போவதென்று முடிவு செய்யப்பட்டது. -

திரு. ஹென்றி ஆஸ்டினும், திரு. யாதவும் ஓர் குழு. அவர்கள் இருவரும் டாஷ்கண்டிற்குச் சென்ருர்கள். இரண்டு நாட்கள், டாஷ்கண்ட் நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்த, நட்புறவுக் கூட்டங்களில் கலந்து கொண்டு. அங்கிருந்து நேரே, லெனின் கிராடுக்குப் பறந்து சென்ருர்கள்.

திரு. ரஷீத்துடீன் அகமத்கானும் நானும், அஜெர் பெய்ஜான் குடியரசின் தலைநகராகிய பாக்கு நகருக்குச் சென்று அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, மாஸ்கோவுக்குத் திரும்ப வேண்டும். பிறகு, லெனின் கிராடு செல்ல வேண்டும். இது போடப் பட்டிருந்த திட்டம்.

இத் திட்டத்தின்படி, நாங்கள் நவம்பர் பன்னி ரண்டாம் நாள் அதிகாலையில் மாஸ்கோவிலிருந்து, :பாக்குவிற்குப் புறப்பட்டோம். விமானம் காலை ஐந்து மணிக்குப் புறப்பட்டது. எனவே நாங்கள் விடியற்கால

நாலரை மணிக்கு ஒட்டலை விட்டுப் புறப்பட நேர்ந்தது.

சோ-9