பக்கம்:சோவியத் மக்களோடு.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

ஆயத்தமாவதற்காக, காலு மணிக்கு விழித்த போது, எவ்வளவோ எரிச்சலாக இருந்தது.

ஐந்து மணி நேரம் பயணத்திற்குப் பின் காங்கள் பாக்கு விமான நிலையத்தில் இறங்கினுேம். பனி முடிய மாஸ்கோவிலிருந்து பறந்து வந்த நாங்கள், ஒளிமயமான ஊரைக் கண்டோம். எங்கும் இளம் வெயிலின் ஒளி. பனியே இல்லாத நிலப் பரப்பு. நம் காட்டிற்கு வந்து விட்டது போன்ற நினைப்பு. அந்த உவகையில் எனக்கு காய்ச்சலால் ஏற்பட்ட உடற் சோர்வு கொடியில் பறந்து விட்டது. தெம்போடு, விமானத்திலிருந்து முதலில் இறங்கினேன்.

படிக்கட்டுகளின் அருகில், ஒங்கி உயர்ந்து வளர்ந்த பெரியவர் ஒருவர், கையில் ரோஜாப் பூச்செண்டோடு நிற்பதைக் கண்டேன். அவர் பின்னுல் மேலும் இருவர் அத்தகையப் பூச்செண்டோடு இருப்பதையும் கண்டேன். எங்களை வரவேற்க வந்தவர்களோ என்று எண்ணினேன்.

என் ஆசை நிறைவேறிற்று. கடைசிப் படியில் கால் எடுத்து வைத்தேன். பெரியவர் இரண்டடி முன் வந்து,

"சலாம்மாலேகும் ; இந்திய நண்பரே என்று கூறிக் கொண்டே என் கையில் பூச்செண்டைக் கொடுத்தார்.

ஆலேகும் சலாம் என்று பதில் கூறிவிட்டு, என் பெயரை வேலு என்று கூறி அறிமுகப்படுத்திக் கொண் டேன்.

அடுத் து அகமத்கான அறிமுகப்படுத்தினேன் அவரையும் பூச்செண்டு அளித்து வரவேற்றனர்.

சோவியத் - இந்திய நட்புறவுக் கழகத்தின் பாக்கு கிளையின் தலைவராவார் அப் பெரியவர். அவர் பெயர் அகா ரெசா குலியவ் ஆகும்.